ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது; ஆனால் தாம் உயிருடன் இருக்கிறேன் என நெதன்யாகு பெயரில் வெளியான வீடியோ பெரும் சர்ச்சையாகி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கொன்றுவிட்டதாக ஈரான் அறிவித்தது. ஆனால் நெதன்யாகு தாம் உயிருடன் இருப்பதாக கூறும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவின் ஒரு குறிப்பிட்ட பிரேமில், நெதன்யாகுவின் கையில் 6 விரல்கள் இருப்பது போன்ற தோற்றம் காணப்பட்டது. இது குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதம் சூடுபிடித்தது.
இந்த வீடியோ, உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்றும், நெதன்யாகு உயிருடன் இல்லை என்றும் செய்திகள் காட்டுத்தீயாகப் பரவின.
அதாவது நெதன்யாகுவின் பெயரிலான வீடியோ,
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு டீப்ஃபேக் (Deepfake) வீடியோ என்றும், நெதன்யாகு உயிருடன் இல்லை என்று கூறப்படுகிறது. இதனை மறுத்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அவசர விளக்கமளித்துள்ளது. மேலும் வீடியோவில் கையை அசைக்கும்போது ஏற்பட்ட கேமரா கோணம் மற்றும் ஒளிச் சிதறல் காரணமாகவே அப்படித் தெரிந்துள்ளது.. இது Motion Blur என்றும் இஸ்ரேலியர்கள் கூறுகின்றனர். சமூக வலைதளங்களில் நெதன்யாகுவுக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் விவாதமாகி உள்ளது.
