தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அவரது மகன் தனுஷுக்கும், அக்சயா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு நவம்பரில் மிக பிரம்மாண்டமாக ஜப்பானில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலத்தில் அமெரிக்காவிற்கு சென்றிருந்த பிரபலங்களான மாதம்பட்டி ரங்கராஜ், தொழிலதிபர் ஆதித்யராம் மற்றும் பரிதாபங்கள் கோபி சுதாகர் ஆகியோரை தனது இல்லத்திற்கு சென்று அழைத்து விருந்து கொடுத்தார். அப்போது அவர்கள் தனது மகனுடன் பேசிய வீடியோக்களை பகிர்ந்து நன்றி தெரிவித்திருந்தார்.
ஆனால் அந்த வீடியோக்களில் அவரது மருமகள் அக்சயா இல்லாததை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் ’மருமகள் எங்கே?’ என அவரது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நெப்போலியன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில் மருமகள் அக்சயா அமெரிக்காவின் நஷ்வில்லியில் தனது வீட்டிற்கு வந்ததையும், அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்ததையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.