ADVERTISEMENT

நேபாளம்: சிக்கினார்கள்.. சிதைத்தார்கள்.. 5 முறை பிரதமருக்கு நேர்ந்த கதி- ரத்த வெள்ளத்தில் மீட்பு- மற்றொரு மாஜி பிரதமர் மனைவி எரித்து கொலை- வீடியோ

Published On:

| By Mathi

NEPAL Viiolence

நேபாளத்தில் அரசுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டத்தில் வெடித்த உச்சகட்ட வன்முறை வெறியாட்டம் தொடருகிறது. நேபாள நாட்டில் 5 முறை பிரதமராக இருந்தவரும் நேபாள காங்கிரஸ் கட்சி தலைவருமான ஷேர் பகதூர் தியூபா Sher Bahadur Deuba மற்றும் அவரது மனைவியும் வெளியுறவு அமைச்சருமான Arzu Rana Deuba ஆகியோர் போராட்டக்காரர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

மற்றொரு முன்னாள் பிரதமரான Jhala Nath Khanal-ன் வீட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதில் அவரது மனைவி ராஜ்யலக்‌ஷ்மி சித்ரகார் சிக்கிக் கொண்டார். வீடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்த தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ADVERTISEMENT

நேபாள பிரதமர் கேபி ஒலி தமது பதவியை ராஜினாமா செய்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் பால்கோட்டில் அவரது பங்களாவும் தீ வைத்து எரிக்கப்பட்டது. நேபாள அதிபர் ராமச்சந்திர பவுதேல், முன்னாள் பிரதமர் புஷ்ப கமால் தால், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரித்வி சுப்பா குருங், முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் ஆகியோரது வீடுகள், பங்களாக்களும் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன.

நேபாளத்தின் பல பகுதிகளில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை இலக்கு வைத்து போராட்டக் குழுவினர் தாக்குதல் நடத்தினர்.

ADVERTISEMENT

போராட்டங்கள் வெடித்த நிலையில் சமூக வலைதளங்கள் மீதான தடை நீக்கப்பட்டாலும் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதால் போராட்டக் குழுவினர் கொந்தளித்து கொண்டிருக்கின்றனர்.

நேபாள அரசியல்வாதிகளின் வாரிசுகள் உல்லாச வாழ்க்கை வாழ்வதை அம்பலப்படுத்தும் வீடியோக்கள் சமூக வலைதங்களில் வெளியாகி பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் நேபாளத்தில் சமூக வலைதளங்கள் அனைத்துக்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்கு எதிராக “Gen Z” என்ற பெயரில் நேபாள இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். நேபாளத்தில் ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடும் நிலையில் இளைஞர்களின் போராட்டம் உச்சகட்டமடைந்து வன்முறையாக வெடித்துள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share