வேப்பிலையைக் கொண்டு நம்முடைய முக சரும அழகை இரண்டு வழிகளில் பாதுகாக்கலாம்.
நம் முகம் மாசுபாடு, தூசி மற்றும் அழுக்கு, அடைபட்ட துளைகள், கூடுதல் எண்ணெய் உற்பத்தி போன்ற காரணத்தால் பொலிவை இழக்கிறது. இது கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. இதனை சரிசெய்ய முகங்களை பிரகாசமாக்க, பேஷ் வாஷ், கிரீம்கள் மற்றும் சீரம்கள் உட்பட எண்ணற்ற பொருட்களை நம் சருமத்தில் பயன்படுத்துகிறோம். ஆனால், இவை உண்மையில் நம் சருமத்திற்கு நன்மை பயப்பதற்கு பதிலாக தீங்கு விளைவிக்க வாய்ப்புகள் உள்ளன.
முகத்தை பிரகாசமாக்கும் வேப்பிலை (Neem leaves brighten the face): ஆனால், இயற்கையான பொருட்களைக் கொண்டு நாம் சருமத்தை பராமரிக்கலாம். அப்படியான ஒரு பொருளாக வேப்பிலை நமக்கு உள்ளது. இது சருமத்தை சுத்தப்படுத்தி முகப்பரு போன்ற பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கும். வேப்ப இலைகளை முகத்திற்கு பயன்படுத்துவதற்கான இரண்டு வழிகளை நாம் பின்பற்றலாம்.
வேப்பிலை நீராவி பிடித்தல் (Neem leaf steaming): ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடுபடுத்த வேண்டும். அதில் வேப்ப இலைகளைச் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அதனை எடுத்து வைத்துக்கொண்டு போர்வை போத்திக்கொண்டு உங்கள் முகத்தில் வேப்ப நீராவியை உள்ளிழுக்க வேண்டும். வேப்ப இலைகளை சுவாசம் மூலம் உள்ளிழுப்பது உங்கள் சருமத்திற்கும் உங்கள் சுவாசத்திற்கும் பெரிதும் பயனளிக்கும்.
வேப்பிலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக, இது முகப்பருவைக் குறைக்கவும், தோல் துளைகளை ஆழமாக சுத்தப்படுத்தவும், தோல் எரிச்சலைத் தணிக்கவும் உதவுகிறது. அத்துடன், அடைபட்ட மூக்கைத் திறக்கவும், சுவாசப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.
முகத்தில் சீரம் போல வேப்பிலையை பயன்படுத்தலாம் (neem leaves serum): வேப்பிலையை சிறிதளவு கொதிக்க விட்டு எடுத்து ஆறவிட்டு அதனை சீரம் போன்ற பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு உங்கள் முகத்தில் வேப்ப நீரைத் ஸ்பிரே செய்யலாம். முகப்பரு, தழும்புகள் மற்றும் எண்ணெய் பசை சருமத்திற்கு இயற்கையான டோனராக இதைப் பயன்படுத்தலாம். இது பல சருமப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
வேப்பிலை ஏன் முகத்திற்கு நன்மை அளிக்கிறது? (benefits of neem leaves): வேம்பு என்பது ஒரு இயற்கையான சரும மருந்தாகும், இது அதன் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக முகப்பரு, தழும்புகள் மற்றும் தொற்றுகளைக் குறைக்கும். இது சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துகிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் நிறத்தை மேம்படுத்துகிறது.
