பொடுகு தொல்லையை ஒழித்து முடிக்கு ஊட்டமளிக்கும் பண்புகளை வேம்பு கொண்டுள்ளது.
பொடுகு தொல்லைதான் நமக்கு மிகப்பெரிய தொல்லையாக உள்ளது. டிசம்பர் – மார்ச் மாதம் வரை குளிர்காலத்தில் பொடுகு தொல்லை கடுமையாகவே இருக்கும். பொடுகு தொல்லையால் முடிகளின் வேர் பலகீனமாகி உதிரத் தொடங்குகின்றன. இதனால் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன. பலருக்கும் அடிக்கடி பொடுகு தொல்லை ஏற்படுவது வழக்கம். அடிக்கடி பொடுகு ஏற்படுவது உச்சந்தலையில் ஊட்டச்சத்து இல்லாததற்கான அறிகுறியாகவும் உள்ளது. பலரும் பொடுகை நீக்க விலை உயர்ந்த ஷாம்புக்கள், பொடுகு சிகிச்சை என மேற்கொள்கிறார்கள்.
வேப்பிலை நன்மைகள் (Neem benefits):
நம்மிடம் இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நாம் பொடுகை உடனே விரட்டிவிட முடியும். ஏனெனில் வேப்ப இலைகளில் ஏராளமான மருத்துவ பயன்கள் உள்ளன. கசப்பான சுவை கொண்ட வேப்பிலை உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக நன்மை அளிக்கிறது. அதேபோல பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வீக்கத்தை குறைக்கிறது வேம்பு. நான்கு முக்கியமான வழிகளில் நாம் வேம்புவை பொடுகு நீக்கத்திற்கு பயன்படுத்தலாம்.
வேப்பம் பூவை கொதிக்க வைத்து முடியை அலசலாம் (Boiling neem flowers):
வேப்ப இலைகளை தண்ணீரில் இட்டு நன்றாக கொதிக்க வைத்து சற்று ஆற விட வேண்டும். அதன்பிறகு வடிகட்டிவிட வேண்டும். குளியலுக்கு ஷாம்புவை பயன்படுத்திய பிறகு வேப்பம்பூவை தண்ணீரை வைத்து தலை முடியை அலச வேண்டும். இது தலையில் அரிப்பை நீக்கி, உச்சந்தலையை சுத்தம் செய்யும்.
வேம்பு + தேங்காய் எண்ணெய் (Neem with coconut oil):
வேம்புவுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலையில் தடவலாம். வேப்ப இலைகளை உலர்த்தி தேங்காய் எண்ணெயில் சேர்க்கை வேண்டும். பிறகு வடிகட்டி, ஒரு பாட்டிலில் சேமித்து வைக்க வேண்டும். இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறை உங்கள் தலைமுடியில் தடவி, பின்னர் ஷாம்பு போட்டு கழுவ வேண்டும். இது உச்சந்தலையில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, உங்கள் தலைமுடியை வேர்கள் வரை வளர்க்கும்.
வேப்பம்பூ தூள் ஹேர் மாஸ்க் (Neem powder hair mask):
வேப்பம்பூ தூள், தயிர் மற்றும் சிறிது கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து உங்கள் தலைமுடியில் தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து அது காய்ந்த பிறகு,பிறகு தலை முடியை தண்ணீர் கொண்டு அலச வேண்டும். இது உங்கள் தலைமுடியை கண்டிஷனிங் செய்து பொடுகை குறைக்க உதவுகிறது.
வேம்பு+ வெந்தய பேக் (Neem + Fenugreek Pack):
ஊறவைத்த வெந்தயத்தை கழுவிய வேப்பிலையுடன் அரைத்து பேஸ்ட் செய்து உங்கள் தலைமுடியில் நேரடியாக தடவ வேண்டும். சற்று நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலையை அலச வேண்டும். இந்த பேக் பொடுகு மற்றும் முடி உதிர்தலைக் குறைக்க உதவுகிறது. மேலும் உங்கள் உச்சந்தலையில் உள்ள பாக்டீரியாக்களையும் குறைக்கும்.
