தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்ற திமுகவின் நம்பிக்கை நிறைவேறாது; தமிழ்நாட்டில் அடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று மதுரையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மதுரையில் இன்று மார்ச் 1-ந் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக- பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், ஜிகே வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரசார கூட்டங்களில் இந்தி மொழியில் பேசும் பிரதமர் மோடி மதுரை பொதுக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசினார்.
இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் திருப்பு முனையாக இருக்கப் போகிறது.. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என திமுக கனவு காண்கிறது.. அது நிறைவேறாது.. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றார்.
மேலும் மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற முறைகேடுகள், மேயர் பதவி விலகியது உள்ளிட்டவைகளையும் சுட்டிக்காட்டி திமுகவை கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி.
அத்துடன், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த தமிழகத்தில் ஆளும் திமுக அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

இக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமையும் என பேசியிருந்தார்.
பிரதமர் மோடியின் உரை:
