கரூரில் கடந்த 27ம் தேதி நடந்த நடிகர் விஜய்யின் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் இருவரும் இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் இன்று தேசிய ஜனநாயக் கூட்டணி சார்பில் நெரிசல் சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஹேமமாலினி எம்.பி தலைமையில் 8 பேர் அடங்கிய குழுவை அமைத்து ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளர். இந்த குழு நாளை அல்லது நாளை மறுதினம் நேரடியாக கரூர் வந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

இந்த குழுவில் அனுராக்தாக்கூர், சிவசேனா எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே, தேஜஸ்வி சூர்யா, ரேகா சர்மா, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. புட்டா மகேஷ் குமார், பிரஜ்லால், அபராஜிதா சாரங்கி உள்ளிட்ட எம்பிகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று கருத்துகளை கேட்டறிவதோடு, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் என்ன நடந்து என்று கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.