என்.டி.ஏ கூட்டணி தொகுதி பங்கீடு : எடப்பாடி பழனிசாமி பேட்டி!

Published On:

| By Kavi

என்.டி.ஏ கூட்டணியில் விரைவில் தொகுதி பங்கீடு நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தமிழகத்தில்  என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இன்னும் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்று ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 

ADVERTISEMENT

இதுதொடர்பாக கூட்டணி கட்சிகள் ஆலோசித்து வருகின்றன. 

இந்தநிலையில் தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களை கண்டித்து என்.டி.ஏ கூட்டணி சார்பில் இன்று (மார்ச் 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ADVERTISEMENT

சென்னை எம்ஜிஆர் நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். 

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் தொகுதி பங்கீடு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. 

ADVERTISEMENT

இதற்கு அவர், “ தேசிய ஜனநாயகக் கூட்டணியில்  தொகுதிப் பங்கீடு குறித்து,  விரைவில் கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்து பேசி நாங்கள் முடிவு செய்து உங்களை அழைத்து அறிவிக்கிறோம். 

மீண்டும் பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருகிறாரா என எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை . தேர்தல அறிக்கை விரைவில் வெளியிடப்படும்” என்றூ பதிலளித்தார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share