9ஆம் வகுப்பு புதிய ஆங்கில பாடப்புத்தகம் ‘காவேரி’ அறிமுகம்… சுதா மூர்த்தி கதையுடன் தொடக்கம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

ncert class 9 english book kaveri 2026

பள்ளி கல்வியில் முக்கிய மாற்றமாக 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய ஆங்கில பாடப்புத்தகத்தை என்.சி.இ.ஆர்.டி (NCERT நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெயினிங்) அறிமுகப்படுத்தியுள்ளது. ‘காவேரி’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த புதிய புத்தகம் 2026–27 கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.

இந்த புத்தகம் முன்பு பயன்படுத்தப்பட்ட ‘பீஹைவ்’ மற்றும் ‘மோமென்ட்ஸ்’ என்ற இரண்டு பாடப்புத்தகங்களை மாற்றி ஒரே புத்தகமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் புத்தகம்

இந்த புதிய பாடப்புத்தகம் தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020 மற்றும் தேசிய பாடத்திட்ட அமைப்பு 2023 அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மொழித் திறன், சிந்தனை திறன் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் வகையில் இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

29 பாடங்களில் இருந்து 16 பாடங்கள்

முந்தைய பாடத்திட்டத்தில் மொத்தம் 29 பாடங்கள் இருந்த நிலையில், புதிய புத்தகத்தில் அந்த எண்ணிக்கை 16 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதில்:

ADVERTISEMENT
  • 8 பாடங்கள் இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள்
  • 6 பாடங்கள் வெளிநாட்டு எழுத்தாளர்களின் படைப்புகள்

என சமநிலையாக சேர்க்கப்பட்டுள்ளன.

சுதா மூர்த்தி கதையுடன் தொடக்கம்

இந்த புத்தகத்தின் முதல் பாடமாக எழுத்தாளர் சுதா மூர்த்தியின் கதையை அடிப்படையாகக் கொண்ட பாடம் இடம்பெற்றுள்ளது.

அவருடைய “ஹௌ ஐ டாட் மை கிராண்ட்மதர் டு ரீட்” என்ற கதையை அடிப்படையாகக் கொண்ட பாடத்துடன் இந்த புத்தகம் தொடங்குகிறது.

இந்திய எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம்

புதிய புத்தகத்தில் பல இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

அதில் முக்கியமாக:

  • சுப்பிரமணிய பாரதி
  • சுதா மூர்த்தி
  • ரபீந்திரநாத் தாகூர்
  • தெம்சுலா ஆஒ
  • மித்ரா புகான்

போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒரே புத்தகமாக மாற்றம்

முன்பு 9ஆம் வகுப்பு ஆங்கில பாடத்தில் இரண்டு தனி புத்தகங்கள் இருந்த நிலையில், தற்போது ஒரே புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்களுக்கு பாடப்பளுவை குறைத்து, புரிதலுக்கு எளிதான பாடத்திட்டம் வழங்குவது நோக்கமாக உள்ளது என்று என்.சி.இ.ஆர்.டி தெரிவித்துள்ளது.

இந்த புதிய ‘காவேரி’ ஆங்கில பாடப்புத்தகம் மூலம் மாணவர்களுக்கு இந்திய எழுத்தாளர்கள் மற்றும் பண்பாட்டை அதிகம் அறிமுகப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share