நடிகை நஸ்ரியா கடந்த ஆண்டு ‘சூக்ஷ்மதர்ஷினி’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பசில் ஜோசப் வில்லனாக நடித்த இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
அந்த படத்திற்கான புரோமோஷன்களில் கலந்துகொண்ட நஸ்ரியா, பின்னர் சோஷியல் மீடியாவை விட்டு ஒதுங்கியிருந்தார். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் எங்கும் அவரது பதிவுகளைக் காண முடியவில்லை.
தனிப்பட்ட காரணங்களுக்காகச் சில காலம் சமூகவலைதள வெளியைத் தவிர்ப்பதாக, இடையே அவர் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, ‘நஸ்ரியா சமூகவலைதளங்களை விட்டு விலகிவிட்டார்’ என்று செய்தி வெளியானது. ‘நஸ்ரியா விவாகரத்து’, ‘கணவன் மனைவி இடையே பிரச்சனை’ என்று பல தலைப்புகள் ஊடகங்களில் வெளியாகின. ஆனால், அனைத்தும் யூகங்களாகவே இருந்தனவே தவிர முழுமையான தகவல்களாக இல்லை.

’அப்படி வந்த தகவல்கள் அனைத்தும் வதந்திகளே’ என்று சொல்லும்படியாக, ஓணம் பண்டிகையையொட்டி மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு வந்திருக்கிறார் நஸ்ரியா.
பகத் பாசில் மற்றும் இருவரும் வளர்க்கும் ஓரியோ எனும் நாயுடன் ‘போஸ்’ தந்திருக்கிறார். அந்த நாய்க்கு ஓணம் விருந்து பரிமாறிய புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து ‘நஸ்ரியா இஸ் பேக்’ என்பது போன்ற வாசகங்களையும் ‘கமெண்ட்’ பிரிவில் பார்க்க முடிகிறது.
கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கும் மேலாக நஸ்ரியாவைச் சுற்றி வந்த வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாகக் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
இனி, ’அடுத்த படத்தோட அப்டேட் எப்போ’ என்று கேட்கத் தொடங்குவார்கள்..!