இன்று நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தம்- 30 கோடி தொழிலாளர்கள், விவசாயிகள் பங்கேற்பு!

Published On:

| By Mathi

General Strike

மத்தியில் ஆளும் பாஜக அரசின் தொழிலாளர்- விவசாய விரோத கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று பிப்ரவரி 12-ந் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை நடத்தி வருகின்றன.

மத்திய தொழிற்சங்கங்கள், தொழில் மற்றும் துறை வாரியான தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் இணைந்து மத்திய பாஜக அரசின் விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத, ஜனநாயக விரோத மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றன. இப்போராட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 30 கோடி தொழிலாளர்கள், விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் மின்சாரம், போக்குவரத்து, காப்பீடு, சுகாதாரம், வங்கி உள்ளிட்டவைகளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இன்றைய வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாட்டின் முக்கிய சேவை துறைகள் கடுமையாக பாதிப்படையும்.

மேலும் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்த உள்ளன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share