“ஒலிம்பிக் மேடையில் ஒலித்த ‘சன் சனன…’ பாட்டு!” – இந்தியர்களை மிரள வைத்த ரஷ்ய வீராங்கனை!

Published On:

| By Santhosh Raj Saravanan

nastasiia gubanova bollywood songs winter olympics 2026 san sanana dhurandhar

இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்று வரும் 2026 குளிர்கால ஒலிம்பிக் (Winter Olympics 2026) போட்டிகளில், இந்தியாவின் கொடி பறக்கிறதோ இல்லையோ, இந்தியாவின் பாட்டு சத்தமாக ஒலித்துள்ளது!

ரஷ்யாவில் பிறந்து, ஜார்ஜியா (Georgia) நாட்டின் சார்பில் போட்டியிடும் ஃபிகர் ஸ்கேட்டிங் (Figure Skating) வீராங்கனை அனஸ்தேசியா குபனோவா (Anastasiia Gubanova), தனது சாகச நடனத்திற்குத் தேர்ந்தெடுத்த பாடல்கள் இப்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகின்றன.

ADVERTISEMENT

அசோகா டு துரந்தர் (Asoka to Dhurandhar):பனிச்சறுக்கு மைதானத்தில் அவர் நுழைந்தபோது, அவர் அணிந்திருந்த சிவப்பு மற்றும் தங்க நிற உடை (Red and Gold outfit) இந்தியப் பாரம்பரியத்தை நினைவூட்டியது. நெற்றியில் அவர் வைத்திருந்த ‘பொட்டு’ (Bindi) ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்தது.

  1. ஆரம்பம்: ஷாருக்கான் – கரீனா கபூர் நடித்த ‘அசோகா’ படத்தி்ல் வரும் சன் சனன…” (San Sanana) பாடலின் மெல்லிய இசைக்கு ஏற்பத் தனது நடனத்தைத் தொடங்கினார்.
  2. வேகம்: பின்னர் இசை அதிரடியாக மாறியது. சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த துரந்தர்’ (Dhurandhar) படத்தின் டைட்டில் பாடலுக்கு அவர் செய்த நளினமான அசைவுகள் அரங்கத்தை அதிர வைத்தன.

நான் ஒரு இந்தியப் பெண்”: இது குறித்துப் பேசிய குபனோவா, “எனக்கு இந்திய இசை வடிவம் மிகவும் பிடித்துள்ளது. இந்தப் பாடல்களுக்கு நடனமாடும்போது நான் என்னை ஒரு இந்தியப் பெண்ணாகவே (Indian Girl) உணர்கிறேன்,” என்று உற்சாகமாகக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ஏற்கனவே இவர் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ (Slumdog Millionaire) மற்றும் ‘ராம் லீலா’ (Ram Leela) படப் பாடல்களுக்கு நடனமாடிப் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒலிம்பிக் போன்ற ஒரு உலகளாவிய மேடையில், இந்திப் பாடலுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தது இந்திய நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது.

வைரல் ரியாக்ஷன்: சமூக வலைதளங்களில், “இந்திய கலாச்சாரத்தை இவர் எவ்வளவு அழகாகக் கொண்டாடுகிறார்!” என்று பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

விளையாட்டு எல்லைகளைக் கடந்தது என்பதற்கு, மிலன் பனிக்கட்டியில் ஒலித்த இந்த இந்திய இசையே சாட்சி!


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share