ADVERTISEMENT

’அம்மா’ ஜெயலலிதா ஜி.. ’அம்மா’ ஜெயலலிதா ஜி.. வானொலியில் மோடி திடீர் புகழாரம்!

Published On:

| By Mathi

Modi Jayalalithaa

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி திடீரென புகழாரம் சூட்டியுள்ளார்.

வானொலி நிகழ்ச்சியான மனதின் குரலில் ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி பேசியதாவது: நமது தேசத்திலே சிலர் எப்போதும் மக்களின் இதயங்களில் குடிகொண்டிருப்பார்கள், அவர்கள் சமூகநலனுக்காக செயலாற்றியவர்களாக இருப்பார்கள். தங்களுடைய நற்காரியங்கள் வாயிலாக மக்களுக்கு முதன்மை அளித்திருப்பார்கள்.

ADVERTISEMENT

“அம்மா ஜெயலலிதா” அவர்கள், மக்கள் நேசிக்கும் இப்படிப்பட்ட ஒரு தலைவர். பிப்ரவரி 24ஆம் தேதி இவருடைய பிறந்த நாளாகும். தமிழ்நாட்டு மக்களுக்கு இவரிடம் இருக்கும் ஈடுபாடு எந்த அளவுக்கு ஆழமானது என்றால், இன்றும்கூட நான் தமிழ்நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் இது நன்கு தெரிகிறது.

அம்மா ஜெயலலிதா அவர்களின் பெயரை நான் குறிப்பிட்டவுடனேயே, தமிழ்நாட்டு மக்களின் முகங்கள் மலர்கின்றன. நமது தாய்க்குலம் குறிப்பாக அவருடன் ஆழமாக இணைந்திருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று சொன்னால், அரசு அதிகாரத்தில் இருந்த வேளையிலே, இவர் பெண்கள்-தாய்மார்கள்-சகோதரிகளுக்காக பாராட்டுக்குரிய பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீராக வைத்திருக்க சிறப்பான வழிமுறைகளைக் கடைப்பிடித்தார். அவரிடத்திலே தேசபக்தி உணர்வு மிகவும் செறிவாக இருந்தது. இதோடு கூடவே, பாரதத்தின் கலாச்சாரப் பாரம்பரியம் மீதும் அவருக்கு மிகுந்த பெருமிதம் இருந்தது.

ADVERTISEMENT

அம்மா ஜெயலலிதா அவர்களுடனான என்னுடைய ஒவ்வொரு சந்திப்பும், ஒவ்வொரு உரையாடலும் எனது மனதிலே இன்றும்கூட நன்கு பசுமையாகப் பதிந்திருக்கின்றன. அவர் குஜராத்திலே 2002 மற்றும் 2012ஆம் ஆண்டிலே நடந்த என்னுடைய பதவியேற்பு விழாவிலே கலந்து கொண்டார். நாங்கள் இருவரும் எங்களுடைய மாநிலங்களின் முதல்வர்களாக அப்போது இருந்த வேளையில், நல்லாளுகை போன்ற விஷயங்களில் அடிக்கடி எங்களுக்கிடையே உரையாடல் நடைபெற்று வந்தது. அவருடைய எண்ணம் மிகவும் தெளிவாக இருந்தது, கருத்துக்கள் மிகவும் நிறைவாக இருந்தன. இதுதான் அவருடைய மிகப்பெரிய சிறப்பு.

பல ஆண்டுகள் முன்பாக அவர் பொங்கல் திருநாளன்று மதிய உணவு அருந்த சென்னைக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவருடைய அந்த நட்புணர்வை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. ஒருமுறை மீண்டும் நான் அவருக்கு என்னுடைய பணிவான சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன்.

ADVERTISEMENT

ஜெயலலிதா அவர்களுக்கு என் நினைவாஞ்சலிகள். சமுதாயத்திற்கு அவர் ஆற்றிய சேவை என்றும் நினைவில் இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மோடியின் வானொலி உரை:

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share