நாமக்கல் மாவட்டத்தில் கடன் தொல்லையால் 3 பிஞ்சு குழந்தைகளை வெட்டிப் படுகொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்த ராஜ் (36). இவருக்கு பிரக்திஷா ஸ்ரீ (9), ரித்திகா ஸ்ரீ (7), தேவ ஸ்ரீ (3) என 3 பெண் குழந்தைகள்.
வீடு கட்டியதால் கோவிந்தராஜ் அதிக அளவில் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. கடன் தொல்லையால் கடும் நெருக்கடியிலிருந்த கோவிந்த ராஜ் தனது 3 குழந்தைகளையும் வெட்டி படுகொலை செய்துள்ளார். பின்னர் அவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லையால் தந்தையே பிஞ்சு குழந்தைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாமக்கல் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.