தலைசிறந்த தொழிற்சங்கவாதி: நல்லகண்ணு மறைவு – ஈபிஎஸ் இரங்கல்!

Published On:

| By Kavi

சிபிஐ முதுபெரும் தலைவர் நல்லகண்ணு இன்று (பிப்ரவரி 25) உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  அவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

நல்லகண்ணுவின் உடல் மருத்துவ மாணவர்களுக்காக தானமாக வழங்கப்படவுள்ளது. அந்தவகையில்,  தனது இறுதி பயணத்திலும் புரட்சி செய்திருக்கிறார் நல்லகண்ணு. 

ADVERTISEMENT

இந்நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,  “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த தொழிற்சங்கவாதியுமான இரா. நல்லக்கண்ணு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்றவரும், அனைவரிடத்திலும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடியவருமான . இரா. நல்லக்கண்ணு, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றித் தருவதற்காக பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர்.

ADVERTISEMENT

‘தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த’ சிறந்த பண்பாளர் நல்லக்கண்ணு வை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share