அண்ணாமலை வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரா? – நயினார் நாகேந்திரன் பதில்

Published On:

| By Pandeeswari Gurusamy

Annamalai

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே.4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் பாஜகவுக்கு 27 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்னும் பாஜக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. குறிப்பாக, தொகுதிகள் ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

இதனிடையே, சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் பியூஷ் கோயல் தலைமையில் பாஜக வேட்பாளர் பட்டியல் தேர்வு தொடர்பான மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றறனர். இந்த கூட்டத்தில் பாஜக வேட்பாளர்கள் யார் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தின் தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் தமிழகம் வந்திருந்தார். மத்திய கமிட்டிக் கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

“ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று வேட்பாளர்கள் என தேர்வு செய்திருக்கிறோம். இந்தப் பட்டியலை அகில இந்திய தலைவருக்கு அனுப்பி வைக்க உள்ளோம். அதைத் தொடர்ந்து எங்கள் பார்லிமென்டரி கமிட்டி கூடி இது குறித்து இறுதி முடிவு எடுக்கும்” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 3-ம் தேதி பாண்டிச்சேரி செல்லும் போது சென்னை வருவார் என்றும், பாண்டிச்சேரி நிகழ்ச்சியை முடித்து விட்டு மீண்டும் தமிழகம் வந்து தங்குவார் என்றும் தெரிவித்தார். மறுநாள் காலை மாநில நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள் உட்பட 67 மாவட்டத் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார் என்றார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் செய்ய 2 நாட்கள் உள்ளன. அனைத்து தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

அப்போது செய்தியாளர்கள், “ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பெயர்கள் அனுப்பப்பட்டுள்ளனவே, அதில் அண்ணாமலை பெயர் உள்ளதா?” என்று கேட்டதற்கு, “எல்லோருடைய பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளன. மகளிர், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share