விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? நயினார் நாகேந்திரன் சொன்னது என்ன?

Published On:

| By Mathi

TVK BJP Alliance.jpg

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய்யின் தவெகவை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா? என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் நேற்று மார்ச் 9-ந் தேதி நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்.

ADVERTISEMENT

அமைச்சரவையில் இடம் கேட்பதைப் பற்றி நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. நாங்கள் 200 இடங்களுக்கு மேல் கண்டிப்பாக வெல்வோம்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தனித்துதான் போட்டியிடுவோம் என ஏற்கனவே அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

விஜய்யின் தவெகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை; துணை முதல்வர் பதவி தருவதாகவும் கூறவில்லை. அதை செய்தியாளர்களே வதந்தி என்கிறீர்கள். அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share