நாகப்பட்டினத்தில் திருமண மண்டப சுற்றுச் சுவரை சேதப்படுத்தியதாக நடிகர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற தவெக தொண்டர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாகப்பட்டினத்தில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக வீடுகள், திருமண மண்டபங்களின் சுற்று சுவர்கள் மீது தவெகவினர் நூற்றுக்கணக்கில் ஏறி நின்றனர். இதில் நாகை மாதா திருமண மண்டபத்தின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது.
இதனையடுத்து தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக தவெகவினர் மீத நாகப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மட்டும் பிரசாரம் செய்யும் நடிகர் விஜய்யின் கூட்டங்களுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.