திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாளை ” மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு” என்ற பெயரில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.
117 பெண் வேட்பாளர்களும், 117 ஆண் வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கும் நிகழ்வுகளில், அந்தந்த பகுதிகளில் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வந்தார்.
கோவை – வேட்பாளர் விபரங்கள்
கோவை தெற்கு – பேரறிவாளன்
கோவை வடக்கு – நர்மதா
கவுண்டம்பாளையம் – கலாமணி ஜெகநாதன்
தொண்டாமுத்தூர் – ரஜபுநிஷா
சிங்காநல்லூர் – நேருஜி
சூலூர்- ராஜசேகரன் சூரப்பன்
பொள்ளாச்சி – செந்தில்குமார்
மேட்டுப்பாளையம் – கோபாலகிருஷ்ணன்
கிணத்துக்கடவு – பானுப்பிரியா
வால்பாறை – உமாதேவி
இதே போல நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டன்ற தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
குன்னூர்- தீனு
கூடலூர் – கார்த்திக்
உதகை -ரகுபதி பீமன்
ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை நாம் தமிழர் கட்சி வெளியிட்டு வருகிறது.
