ADVERTISEMENT

‘தக் லைஃப்’ படத்தில் மிஸ்ஸிங்… ‘முத்த மழை’ வீடியோ ரீலிஸ்!

Published On:

| By uthay Padagalingam

மணி ரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 5-ஆம் தேதியன்று ரிலீஸ் ஆனது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் அந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் விதமாக அமையவில்லை. Mutha Mazhai video song out

ADVERTISEMENT

இந்த படத்தில் 9 பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் தந்திருந்தார். ‘ஹே சுகர் பேபி’, ‘மாறா’, ‘ஜிங்குச்சா’ ஆகியன ரசிகர்களால் வரவேற்கப்பட்டாலும், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘முத்த மழை’ பாடல் படத்தில் இடம்பெறவில்லை.

‘விண்வெளி நாயகா’ பாடலோ கிளைமேக்ஸில் வரும் டைட்டில் கிரடெட்டில் இடம்பெற்றது. இது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அது குறித்த விமர்சனங்களும் கடுமையாக அமைந்தன.

ADVERTISEMENT

இந்த நிலையில், இப்போது ‘முத்த மழை’ பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ’பம்பாய்’ படத்தில் வரும் ‘கண்ணாளனே’ சாயலில் தொடங்குகிறது இப்பாடல். த்ரிஷா ஒரு மேடையில் பாடுவதாக அமைந்த இப்பாடல் காட்சியில், பின்னணியில் ஆடுபவர்கள் ‘கதக்’ பாணி நடனம் நமக்கு ‘விஸ்வரூபம்’ படத்தில் வரும் ’உன்னை காணாது நான்’ பாடலை நினைவூட்டுகிறது.

’தக் லைஃப்’ படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் காட்சிகளின் பின்னணியில் ஒலிப்பதாகவே உள்ளன. இடையிடையே வசனக் காட்சிகளும் வந்து போகும். ஆனால், முழுக்க நாயகி த்ரிஷா பாடுவதாகவே இந்த ‘முத்த மழை’ அமைந்துள்ளது. ’இது படத்தில் இடம்பெறாதது வருத்தமான விஷயம் தான்’ என்கின்றனர் ரசிகர்கள்.

ADVERTISEMENT

‘விண்வெளி நாயகா பாடல் தயாராக இருந்தால் அதையும் வெளியிடுங்கள்’ என்பது அவர்களது வேண்டுகோள். என்ன சொல்கிறது ‘தக் லைஃப்’ படக்குழு? Mutha Mazhai video song out

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share