ADVERTISEMENT

காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் தலையிடுவதா? மாணிக்கம் தாகூர் எம்பி காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல. கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல என மாணிக்கம் தாக்கூர் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தவெக தலைவர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்து பேசினார். இது தமிழகத்தில் இந்தியா கூட்டணி கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் உத்தரபிரதேசத்தை விட தமிழ்நாடு அதிக கடன் வாங்கும் மாநிலமாக உள்ளது என சமூக வலைதளத்தில் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதைத்தொடரந்து விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் தலையிட வேண்டாம் என்று மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்துள்ளர்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “VCK, MDMK, CPI & CPM கட்சிகள் இந்தியா எதிர்கட்சி தலைவர் அவர்களிடம் “நடவடிக்கை எடுக்க” கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றி

ADVERTISEMENT

டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தி படித்தேன், இது ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது: காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா?

தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை, எழுத்தாளர் ரவி குமார் எம்.பி, துரை வைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகியோரிடம் “உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்” என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா? கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன — பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல; கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும். ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது; இது BJP–RSS அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும். இது கட்சி செயல் வீரர்கள் தன்மான உணர்வை தூண்டும். சிபிஐ & சிபிஎம் தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும் ,கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், அண்ணன்

ADVERTISEMENT

வைகோ, திருமாவளவன் அண்ணனும், கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் “லக்ஷ்மண் ரேகை”யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல — ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது. கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல.” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share