9 மாத குழந்தையுடன் மருமகள் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவர் மாமியாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Mother commits suicide with 9-month-old baby
மாங்காடு அருகில் உள்ள முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயக்குமார் – மகேஷ்வரி என்ற பெண்ணை10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். பிறகு கர்ப்பம் தரித்த மகேஷ்வரி பிரசவத்துக்காக அம்மா வீட்டுக்கு சென்றார். இந்த தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு நிகிஷ் என்று பெயர் வைத்தனர்.
குழந்தை பிறந்த பிறகு மகேஷ்வரியின் பெற்றோர், மகளை கணவர் வீட்டுக்கு சென்று விட்டுவிட்டு வந்தனர்.
இந்தநிலையில் திருமணத்தின் போது எதிர்பார்த்த(வரதட்சணை) எதுவும் செய்யவில்லை, குழந்தைக்கும் எதுவும் போட்டு அனுப்பவில்லை என்று மகேஷ்வரியின் மாமியாரும் கணவரும் கொடுமைபடுத்தியுள்ளனர்.
இதனால் 8 மாத குழந்தையை தூக்கிக் கொண்டு, அம்மா வீட்டுக்கே சென்றுள்ளார் மகேஷ்வரி. ஆனால் அவரது பெற்றோர், “இங்கே இருந்தால் ஊர் ஒரு மாதிரி பேசும்” என்று கூறி கணவர் வீட்டுக்கே அனுப்பியுள்ளனர்.
அங்கு, மாமியார் லட்சுமியும், கணவர் விஜயகுமாரும் மகேஷ்வரியை தினசரி திட்டுவதும், அடிப்பதுமாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த சித்ரவதையை தாங்க முடியாமல், கணவர் வீடு அமைந்துள்ள பகுதியில் இருந்த பொது கிணற்றில் குழந்தையுடன் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் மகேஷ்வரி.
திருமணம் நடந்த இரண்டு வருடத்தில் பெண் தற்கொலை செய்துகொண்டதால், இதுகுறித்து ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வந்த இந்த வழக்கில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ப.உ.செம்மல் தீர்ப்பு வழங்கினார்.
இறந்துபோன மகேஷ்வரியின் தந்தை, தாய் மற்றும் வழக்கின் விசாரணை அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரித்து, நல்லத்தங்காள் கதையை சொல்லி 102 பக்க தீர்ப்பை எழுதியுள்ளார்.
சட்டப்பிரிவு 306ன்படி தற்கொலைக்கு தூண்டியதற்காக மாமியார் லட்சுமிக்கும் கணவர் விஜயகுமாருக்கு தலா 10 வருடம் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த தீர்ப்பை பிறப்பித்த நீதிபதி ப.உ.செம்மல், ஐந்து முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இரண்டு போக்சோ வழக்குகளில் 20 வருட சிறை தண்டனையும், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 10 வருட சிறை தண்டனையும், சொத்துக்கு ஆசைப்பட்டு சிறுமி ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனையும் கொடுத்துள்ளார். Mother commits suicide with 9-month-old baby