ADVERTISEMENT

மூக்குத்தி அம்மன் 2 பர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

Published On:

| By christopher

Mookuthi Amman 2 first look released!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா, ஊர்வசி நடிப்பில் 2020ஆம் ஆண்டு வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் பக்தி, காமெடி, சமூக அக்கறைமிக்க கருத்துக்களுடன் ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வெற்றியை அறுவடையை செய்தது.

இந்த நிலையில் அதே கதைக்களத்தில் இன்னும் பிரம்மாண்டமான அனுபவம் தரும் வகையில், கமர்சியல் படங்களில் அனுபவம் வாய்ந்த இயக்குநர் சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 என்ற திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

ADVERTISEMENT

இதனை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐசரி கணேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இந்த நிலையில் ஆயுத பூஜை திருநாளை முன்னிட்டு மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் திரையரங்குகளுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share