தமிழ்நாட்டில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்களின் பள்ளி படிப்பு முடியும் வரை மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் “அன்புக் கரங்கள்” திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 15) தொடங்கி வைத்தார்.
வறுமையில் வாழும் குடும்பங்களை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு “தாயுமானவர்“ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளைப் பாதுகாத்திடும் வகையில், “அன்புக்கரங்கள்” திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
இத்தகைய குழந்தைகள், ” 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதுதான்” அன்பு கரங்கள் திட்டம்.
இத்திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் இன்று செப்டம்பர் 15-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.