ADVERTISEMENT

பருவமழை எதிரொலி… 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

Published On:

| By christopher

Monitoring officers appointed for 12 districts

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்துவருவதையொட்டி 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.10.2025) தலைமைச் செயலகத்தில் சென்னை. திருவள்ளுர். காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.

ADVERTISEMENT

இந்த ஆய்விற்குப் பிறகு, இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தினால் ஆரஞ்சு / சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பின்வரும் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகளை (Monitoring Officers) தத்தமது மாவட்டங்களுக்கு உடனடியாக சென்று அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, ஆய்வு செய்யுமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.

1 . திருவள்ளூர் – மரு. கே.பி.கார்த்திகேயன் – மேலாண்மை இயக்குநர், எல்காட் நிறுவனம், சென்னை

ADVERTISEMENT

2. காஞ்சிபுரம் – கே.எஸ்.கந்தசாமி – மேலாண்மை இயக்குநர், தாட்கோ, சென்னை

3. செங்கல்பட்டு – கிரந்திகுமார் பட்டி – மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், சென்னை.

ADVERTISEMENT

4. விழுப்புரம் – எஸ்.ஏ. இராமன், இயக்குநர் – தொழிலாளர் நலன், சென்னை

5. கடலூர் – டி.மோகன் – இயக்குநர், சுரங்கம் மற்றும் கனிமவளம், சென்னை

6. மயிலாடுதுறை – கவிதா ராமு – மேலாண்மை இயக்குநர், கோ ஆப்டெக்ஸ், சென்னை

7. திருவாரூர் – டி. ஆனந்த் – ஆணையர், ஆதிதிராவிடர் நலம், சென்னை

8. நாகப்பட்டினம் – ஏ.அண்ணாதுரை – மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சென்னை

9. தஞ்சாவூர் – எச். கிருஷ்ணனுன்னி – தமிழ்நாடு மருத்துவ சேவைகள் சென்னை கழகம்.

10. கள்ளக்குறிச்சி – பி. ஸ்ரீ வெங்கடபிரியா – செயலாளர், மாநில தேர்தல் ஆணையம், சென்னை.

11. அரியலூர் – எம். விஜயலட்சுமி, ஆணையர் – இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி, சென்னை

12. பெரம்பலூர் – எம். இலட்சுமி, – ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நலம், சென்னை

சென்னையைப் பொறுத்தமட்டில், 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி மண்டல அதிகாரிகள் தத்தமது மண்டலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குமாறும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share