சென்னையில் மோடி.. மதுரை பிரசார கூட்டத்தில் நாளை பங்கேற்பு!

Published On:

| By Mathi

Modi Chennai

மதுரையில் நாளை மார்ச் 1-ந் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று இரவு (பிப்.28) பிரதமர் மோடி சென்னை வருகை தந்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக, அன்புமணி பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் நாளை மதுரையில் நடைபெற உள்ளது. மேலும் மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலும் பிரதமர் மோடி தரிசனம் செய்கிறார்.

ADVERTISEMENT

இதற்காக சென்னைக்கு இன்று இரவு வருகை தந்த மோடியை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதனையடுத்து பிரதமர் மோடி ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share