தர்மேந்திர பிரதான் தந்தை மறைவு : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

Published On:

| By christopher

mkstalin condolences to dharmendra pradhan

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை மறைவையடுத்து பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். mkstalin condolences to dharmendra pradhan

முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையுமான தேபேந்திர பிரதான் உடல் நலக்குறைவால் இன்று (மார்ச் 17) காலமானார். அவருக்கு வயது 84.

ஒடிசாவின் ஒன்றிணைந்த தென்கணல் மாவட்டத்தில் பிறந்தவரான தேபேந்திர பிரதான் ஒடிசா அரசியலின் முக்கியப் பிரமுகராக பார்க்கப்படுகிறார்.

மூன்று முறை அம்மாநில பாஜக தலைவராகவும் இருந்தவர், அங்கு பாஜகவின் அடித்தளத்தை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார்.1998ஆம் ஆண்டு ஒடிசாவின் தியோகர் தொகுதியிலிருந்து 12வது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்களவையில் அறிமுகமான பிறகு வாஜ்பாய் அரசில் போக்குவரத்துக்கான இணையமைச்சராக அவருக்கு பதவி வழங்கப்பட்டது.

1999 தேர்தலில் மக்களவைத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்ட அவர், 1999 முதல் 2001 வரை போக்குவரத்து மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2001 ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஒடிசாவில் இறுதி அஞ்சலி! mkstalin condolences to dharmendra pradhan

இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், டெல்லியில் இன்று மரணமடைந்தார். பின்னர் அவரது உடல் விமானம் மூலம் ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து அவரது உடல் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, துணை முதல்வர்கள் கே.வி.சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா, ஒடிசா கேபினட் அமைச்சர்கள் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கேபினட் அமைச்சர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து புவனேஸ்வரில் உள்ள புரி ஸ்வர்கத்வாரில் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

தேபேந்திர பிரதான் மறைவிற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தேபேந்திர பிரதான் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி தனது பதிவில், “டாக்டர் தேபேந்திர பிரதான் கடின உழைப்பாளி மற்றும் பணிவான தலைவராக தனக்கென ஒரு சிறப்பு முத்திரையைப் பதித்தவர். ஒடிசாவில் பாஜகவை வலுப்படுத்த அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார். வறுமை ஒழிப்பு மற்றும் சமூக அதிகாரமளிப்பில் கவனம் செலுத்தி, ஒரு எம்.பி. மற்றும் அமைச்சராக அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவரது மறைவால் நான் வருத்தமடைந்தேன். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதான் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன், அவருக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கடினமான காலத்தை கடக்க மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு வலிமை கிடைக்கட்டும்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share