ஸ்டாலின் மீண்டும் முதல்வராகனும்.. ஆனால்..’ விடாது கறுப்பாய்’ மாணிக்கம் தாகூர் சர்ச்சை பேட்டி

Published On:

| By Mathi

Stalin Manickam Tagore

தமிழகத்தின் முதல்வராக மீண்டும் மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என காங்கிரஸ் கட்சி பாடுகிறது; அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக அமைச்சரவையில் இடம் பெறுவதில் என்ன தவறு? என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார்.

நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலுக்கு மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டியில் கூறி உள்ளதாவது: திமுக-வோட தனிப்பட்ட வாக்கு வங்கிங்கிறது 24% தான். ஆனா நாம எல்லாரும் ஒண்ணா சேரும்போதுதான் அது 36% அல்லது 43% ஆகுது. அப்போ அந்த வெற்றியில் எல்லாருக்கும் பங்கு இருக்கணும்ல?

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியில இருந்து ஒரு ரெண்டு பேரு அமைச்சரா இருந்தா என்ன தப்பு? விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள்னு கூட்டணிக் கட்சிகள்ல இருக்கிற நல்லவங்க, விவரம் தெரிஞ்சவங்க அமைச்சர்களா வர்றதுல ஒரு தப்பும் இல்லையே

2016-ல 41 இடங்கள்ல போட்டியிட்டோம், ஆனா 2021-ல அது 25-ஆ குறைஞ்சிருச்சு. இது கட்சிக்குள்ள பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்கு. இதைத் தொடர்ந்து நியாயப்படுத்திக்கிட்டே இருக்க முடியாது

ADVERTISEMENT

என்னதான் வருத்தம் இருந்தாலும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதல்வராக வரணும்ங்கிறதுல நாங்க உறுதியா இருக்கோம். அவரை முதல்வராக்குறதுக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share