2026ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இறுதி நாளான இன்று (ஜனவரி 24) முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையில் தமிழக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசி உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “இன்றைக்கு தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட அதிகம் வளர்ந்திருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டை அண்ணாந்து பார்க்கின்றார்கள். அதற்கு காரணம் நம்முடைய திட்டங்கள், நாம் செய்து கொண்டிருக்கக்கூடிய சாதனைகள், இவையெல்லாம்தான் என் மகிழ்ச்சிக்குக் காரணம் என திட்டங்கள் குறித்து கூறுகையில்,
- ஆட்சிப் பொறுப்பேற்றதும், நான் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணத்துக்குதான்! இந்தப் பயணங்களால் மாதந்தோறும் 800 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை ஒவ்வொரு மகளிரும் சேமிக்கின்றார்கள். இதன் மூலமாக, 2021 மே மாதத்திலிருந்து இப்பொழுது வரை தோராயமாக 60 ஆயிரம் ரூபாய் வரை சேமித்திருக்கின்றார்கள். பெண்களுக்கான மிகப்பெரிய சமூகப் பொருளாதார பலத்தை இந்தத் திட்டம் வழங்கியிருக்கிறது.
- அடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்! ஒரு கோடியே
31 இலட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குகின்றோம். இந்தத் திட்டத்தில் இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும் 29 ஆயிரம் ரூபாயை கொடுத்திருக்கின்றோம். அந்தப் பெண்கள் எல்லோரும் எங்கள் அண்ணன் கொடுக்கின்ற மாதாந்திர சீர் என்று பெருமையுடன் சொல்கிறார்கள். - இந்த ஆண்டு தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு 2 கோடியே 23 இலட்சம் குடும்பங்களுக்கு 3 ஆயிரம் ரூபாயை வழங்கினோம். தமிழ்நாடே மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை கொண்டாடியது. தமிழ்நாடு முழுவதும் 20 இலட்சத்து 59 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் தினமும் காலையில் சூடான, சத்தான, சுவையான உணவை சாப்பிடுகின்றார்கள்.
- நான் முதல்வன் திட்டத்தில் 48 இலட்சத்து 65 ஆயிரம் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
- புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் 12 இலட்சம் மாணவ, மாணவியர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்.
- 2003 முதல் 2021 வரை, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் 6 மாணவர்கள் மட்டுமே பயனடைந்திருக்கின்றார்கள். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தில் 385 மாணவர்களுக்கு 162 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் படிக்கின்றார்கள்.
- அரசு ஊழியர்களுடைய 23 ஆண்டுகால கோரிக்கையான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கின்றோம். நாம் ஆட்சிக்கு வந்தபோது அரசு ஊழியர்களுக்கு 17 விழுக்காடாக இருந்த அகவிலைப்படியை இப்பொழுது 58 விழுக்காடு எனுமளவுக்கு உயர்த்தி வழங்கியிருக்கோம்.
- 2 இலட்சம் விவசாயிகளுக்கு புதிய இலவச மின் இணைப்புகள்,
- 14 புதிய உழவர் சந்தைகள் தொடக்கம்.
- 2 கோடியே 56 இலட்சம் பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயன்பெற்றிருக்கிறார்கள்.
- “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48” திட்டத்தில் சாலை விபத்துக்குள்ளான 5 இலட்சத்துக்கும் அதிகமானோரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு 483 கோடி ரூபாய்க்கு காப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது.
- கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு
1 இலட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது. - 2 இலட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் வீடுகள்.
- 22 இலட்சத்து 71 ஆயிரம் ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா.
- 4 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு.
- 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு.
- 12 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகள் ஈர்ப்பு.
- தாயுமானவர் திட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 27 இலட்சத்து 55 ஆயிரம் பேருக்கு வீடு தேடி
ரேஷன் பொருட்கள். - 5 ஆயிரத்தி 700 கோடி ரூபாய் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ஒதுக்கீடு.
- சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வென்ற
200 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி. - கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை.
- மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்.
- சென்னையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்.
- திருச்சி பஞ்சப்பூரில் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்.
- முதல்வர் படைப்பகங்கள்.
- 38 மாதிரிப் பள்ளிகள்.
- 37 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்.
- 10 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள்
- 19 தோழி விடுதிகள்.
- 141 மினி ஸ்டேடியங்கள்.
- பழங்குடியினர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஆயிரம் கோடி ரூபாயில் தொல்குடி திட்டம்.
- ஆயிரம் கோடி ரூபாயில் அயோத்திதாசர் பெயரிலான ஆதிதிராவிடர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்.
- 6 ஆயிரத்தி 45 கோடி ரூபாயில் வடசென்னை
வளர்ச்சித் திட்டம். - நெடுஞ்சாலைத் துறை மூலமாக, 24 ஆயிரத்தி 774 கிலோமீட்டர் நீள சாலைகள் 180 உயர்மட்டப் பாலங்கள்.
- 20 ஆயிரத்து 484 கிலோ மீட்டர் தூரத்துக்கு
கிராமச் சாலைகள் மேம்பாடு. - 121 தடுப்பு அணைகள்
- 101 அணைக்கட்டுகள்
- மிக நீளமான, G.D. நாயுடு மேம்பாலம்
- மிக நீளமான, வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்
- 87 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம், சுமார் 3 கோடி மக்கள் பயன்பெறும் 75 இலட்சம் வீட்டு இணைப்புகள்.
- விடுதலைப் போராட்ட வீரர்கள் உள்ளிட்ட, முக்கியத் தலைவர்களுக்கு 23 மணிமண்டபங்கள் – 70 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- சென்னை வள்ளுவர் கோட்டம் சீரமைப்பு.
- கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியார் நினைவகம் சீரமைப்பு.
- கீழடி அருங்காட்சியகம்.
- பொருநை அருங்காட்சியகம்.
- கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்.
- கலைஞர் நூற்றாண்டு பூங்கா.
- கோவையில் செம்மொழிப் பூங்கா.
- தொல்காப்பிய பூங்கா சீரமைப்பு.
- 39 கோடி ரூபாயில் சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட உத்தரவு.
- 10 கோடி ரூபாயில் தொன்மையான தேவாலயங்கள் புதுப்பிப்பு என்று சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கிறது. சொல்வதற்கு நேரம்தான் இல்லை” என தெரிவித்தார்.
