“இதுதான் வளர்ச்சி.. திராவிட மாடல் 2.0-வில் இன்னும் பன்மடங்காகும்! ” – மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Published On:

| By Pandeeswari Gurusamy

MK Stalin

திராவிட மாடல் ஆட்சியில் சென்னையில் 30,167, மற்ற மாவட்டங்களில் – 46,207 என மொத்தம் 76,374 குடியிருப்புகளை உருவாக்கியுள்ளோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலை, பகுதியில் ரூ.133 கோடி செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 700 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட ‘முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை’ இன்று (மார்ச் 11) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ADVERTISEMENT

இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“திமுக: வளர்ச்சி இயந்திரம்! (DMK: The Development Engine) குடிசையில்லாத் தமிழ்நாடு எனும் கனவை அடைந்திடும் நோக்கத்துடன் 1970-இல் தலைவர் கலைஞர் “தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம்” உருவாக்கினார். நமது நம் திராவிட மாடலில் அதனை “நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” எனப் பெயர் மாற்றினோம். இது வெறும் பெயர் மாற்றமல்ல; செயலாற்றலில் புதுப் பாய்ச்சல் என நிரூபித்திருக்கிறோம்.

ADVERTISEMENT

அதற்கான Data இதோ:

கடந்த 2016-21 அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், இந்த வாரியத்தின் மூலம், சென்னை மற்றும் பிற மாவட்டங்கள் என மொத்தம் 27,668 குடியிருப்புகள்தான் உருவாக்கப்பட்டன.

ADVERTISEMENT

நம்முடைய திராவிட மாடலில், சென்னை – 30,167, மற்ற மாவட்டங்களில் – 46,207 -என மொத்தம் 76,374 குடியிருப்புகளை உருவாக்கியுள்ளோம்.

கடந்த ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்தக் குடியிருப்புகளின் எண்ணிக்கையைவிட, நமது ஆட்சிக்காலத்தில் சென்னையில் மட்டும் உருவாக்கப்பட்டுள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகம். இதுதான் மாற்றம்! இதுதான் வளர்ச்சி! இதுதான் செயலாற்றல்!

இதன் தொடர்ச்சியாக 700 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட “முதல்வர் நகர்ப்புறக் குடியிருப்புகள்” உள்ளிட்ட திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைத்தேன்.

திராவிட மாடல் 2.0-வில் இது இன்னும் பன்மடங்காகும்!” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share