பாஜக டப்பா என்று நம்பி அதிமுக இருக்கிறது. அதிமுக என்ற மூழ்கும் கப்பலை நம்பி பாஜக இருக்கிறது. பூஜ்யமும், பூஜ்யமும் சேர்ந்து பூஜ்யம்தான். ராஜ்யம் கிடைக்காது என முதல்வர் ஸ்டாலின் அதிமுக பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளர்.
கன்னியாகுமரியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பாஜகவிற்கு கிடைத்த சரியான ஆள் தான் இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி. ஒருத்தர் நாட்டு மக்கள் ஒவ்வொருத்தருக்கும் பதினைந்து லட்ச ரூபாய் தருவேன் என்று வாக்குறுதி கொடுத்த மாதிரியே பழனிசாமி வாக்குறுதி கொடுத்தபடி வெரைட்டி வெரைட்டியாக வடை சுட்டுக்கொண்டு இருக்கிறார். இந்த வடைகளை எல்லாம் மக்கள் நம்பத் தயாராக இல்லை.
இன்னொரு பக்கம் தேர்தலை காரணமாகக் காட்டி மகளிர் உரிமைத் தொகையை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்கலாம். மக்களுக்கு திமுக அரசு மீது அதிருப்தியை உருவாக்கி கெட்ட பெயர் ஏற்படுத்தலாம் என்று சூழ்ச்சி பண்ணினார்கள். இதை அட்வான்ஸாக நாங்கள் தெரிந்து கொண்டு என்னுடைய சகோதரிகளுக்கும் தாய்மார்களுக்கும் ரூ.5000 அட்வான்ஸ் பணமாகக் கொடுத்தேன்.
நாம் செய்த இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் மக்கள் ஹேப்பி. எதிர்க்கட்சிகள் தான் நிலைகுலைந்து போய் உள்ளனர். முதலில் கிண்டல் அடித்தார்கள், பகடி செய்தார்கள். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களால் நமது அதிரடி முடிவுக்கு மக்கள் கிட்ட கிடைத்த வரவேற்பை மறைக்க முடியவில்லை. அதனால் இப்போது அதற்கு நாங்கள் தான் காரணம் என்று சொல்கிறார்கள்.
எங்களால் தான் நடந்தது என்று உரிமையைக் கொண்டாட வந்திருக்கிறார்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிப் புலம்புங்கள். எங்கள் திட்டங்கள் ஹிட் ஆகிவிட்டது. இப்போது ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை சிறப்புத் தொகுப்பு மக்களிடத்தில் சூப்பர் ஹிட். இது ஹிட்,
பாஜக டப்பா என்று நம்பி அதிமுக இருக்கிறது. அதிமுக என்ற மூழ்கும் கப்பலை நம்பி பாஜக இருக்கிறது. பூஜ்யமும், பூஜ்யமும் சேர்ந்து பூஜ்யம்தான். ராஜ்யம் கிடைக்காது. நமது திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் இன்ஜின் 11.19 சதவீதம் இரட்டை இலக்க வளர்ச்சியுடன் யாரும் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் மீண்டும் அமையும்.”என முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.
