காவல் நிலைய விசாரணையில் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்தது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஜூன் 30) தெரிவித்துள்ளார். minister kn nehru assures strong action
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் நகை காணாமல் போன வழக்கில் அப்பகுதியை சேர்ந்த காவலாளி அஜித்குமாரை கடந்த ஜூன் 27-ஆம் தேதி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்தநிலையில், ஜூன் 28-ஆம் தேதி அஜித்குமார் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும், தமிழகத்தில் லாக் அப் மரணங்கள் ஏற்படா வண்ணம் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக கூட்டணி கட்சிகளான சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்தநிலையில், திருவாரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேருவிடம் செய்தியாளர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கே.என்.நேரு, “தோழமை கட்சிகளுடன் முதல்வர் ஸ்டாலின் மிக நெருக்கமாக இருக்கிறார். இளைஞர் மரமணடைந்த வழக்கில் முதல்வர் ஸ்டாலின் உரிய முறையில் நடவடிக்கை எடுப்பார்” என்று தெரிவித்தார். minister kn nehru assures strong action