தேர்தல் வாக்குறுதியும் வாட்ஸ் அப் மெசேஜும் : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு சாயந்திரம் வீட்டுக்கு வந்து டிவி-ய போட்டா, ஈரான் – இஸ்ரேல் போர விட தமிழ்நாட்டுல கூட்டணி பேச்சுவார்த்தை போர் பத்திதான் அதிகம் போய்ட்டு இருந்தது. 

இந்த அக்கப்போரே வேணாம்னு டிவிய ஆப் பன்னிட்டு வாட்ஸ் அப் ஓபன் பன்னா, ‘ இத ஷேர் பண்ணா சம்பளம் டபுள், ட்ரிபுள் ஆகும்னு ஒரு குரூப் மெசேஜ் வருது’ 

ADVERTISEMENT

வர சம்பளமே வந்த வேகத்தில EMI-ல எடுத்துக்குறாங்க… இதுல அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதி மாதிரி இப்படி மெசேஜை பரப்புரதுலாம் யாருடா… எப்பா… 

சரினு போன வச்சுட்டு… ஏசி போட்டு தூங்கலாம்னு பாத்தா கரண்ட்டு கட் ஆயிடுச்சு… இதுக்குதான் நான் நேத்து EMI கட்டுனேன்… 

ADVERTISEMENT

என்ன விதி என்ன விதிடா… 

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…. 

ADVERTISEMENT

சரண்யா

வாழ்க்கை ல இன்பம் துன்பம் இரண்டும் கலந்து தான், எல்லா நேரமும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது,.. 
என்ன மேனேஜர் திட்டினாரா..
ஆமா என்ன இப்ப

ArulrajArun

“திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்தபோது வருத்தமாக இருந்தது: பிரதமர் மோடி
-வீரன் தேர்தல் வருவதை உணருகிறான்

அண்ணாச்சி

முத்துக்கு முத்தாக ,
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்
ஒன்னுக்குள் ஒன்னாக…!!!

கடைநிலை ஊழியன்

வரதும் தெரியல.. போறதும் தெரியல..
என்ன லீவா மாப்ள.. ?
சம்பளம் மாமா..

சரண்யா

முன்னாள் MLA கட்சி மாறி பார்த்து இருப்பீங்க,
முன்னாள் முதல்வர் கட்சி மாறி பார்த்து இருக்கீங்களா.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஏன்னே நாதஸை அடிச்சீங்க..?

பேஸ்புக்லயும் இன்ஸ்டாலயும் விஜயை சங்கீதா அன்பாலோ பண்ணிருந்தாலே சோஷியல் மீடியாவே டைவர்ஸ் வாங்கி தந்துருக்கும், எதுக்கு வீணா கோர்ட் கேஸ்னு அலையறாங்கன்னு கேட்கறாம்ப்பா..

𝐓𝐞𝐚_𝐓𝐢𝐦𝐞_𝐌𝐂

Basically நானும் ஒரு போர்ல தான் இருக்கேன்.
என்ன போர் bro?

வாழ்க்கை எனும் போர் bro.

செங்காந்தள்

தவறு யார் செய்கிறார்கள் என்பதை பொறுத்தே அது தவறா இல்லையா சிறிய தவறா பெரிய தவறா என்று தீர்மானிக்கப்படும்…!!!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share