என் வேலைக்கு உலை வச்சுட்டாங்க : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

balebalu

ADVERTISEMENT

அந்த தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் ஆகிட்டாங்களே ன்னு உனக்கு கவலை
வேலை போனாலும் பரவாயில்ல
விஜய் கூட டான்ஸ் ஆடினால் போதும் ன்னு
இன்னும் பேட்டி கொடுக்காம இருக்காங்களே ன்னு எனக்கு சந்தோசம்

iQKUBAL

ADVERTISEMENT

முதல் தடவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தப்போ யாருக்குமே பிடிக்கல.. ஆனா இப்போ எல்லாரும் நல்லா பாத்துக்குறாங்க மாமா.. 
யாரு மாப்ள? லவ்வரா?
லவ்வரா? ரோட்ல கிடந்த நாய்க்குட்டி மாமா.

கோழியின் கிறுக்கல்

ADVERTISEMENT

கண்டிப்பாக திரும்ப வராது என்று தெரிந்தே கொடுக்கப்படுகின்றன,
சில கடன்கள்… 

iQKUBAL 

அதுல பாருங்க சம்பந்தி..
கொரோனா வந்தப்ப எல்லா கடையும் பூட்டியிருந்துச்சு.. ஹோட்டல் மட்டும் தொறந்திருச்சு..
இப்ப Gas பிரச்சனையில ஹோட்டல் மட்டும் பூட்டி இருக்கு.. எல்லா கடையும் தொறந்திருக்கு..

Dr. M. A. N. Loganathan

யோசிக்காமல் காசை வாங்குக-வாங்கியபின்
யோசித்துப் பட்டனை அமுக்குக

ச ப் பா ணி

எல்லாத்தையும் சாப்பிட்டு அடுத்த நாள் காலை ஏபிசி ஜூஸ் குடித்தால்.. டயட்டில் இருக்கிறோம்னு நினைச்சிக்கிறோம். 

mohanram.ko

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் எங்கள் அண்ணன்…
முதல்ல, வீட்டை விட்டு வெளியே வர சொல்லுப்பா…

கோழியின் கிறுக்கல்!

நமக்கு ஆறுதலாய் இருந்தவரே,
நம்மை ஆறுதல் தேட வைத்து விடுவதே வாழ்க்கையின் சோகம்!!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share