‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ ஆசை : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

என்  Frined-அ ரொம்ப நாள் கழிச்சு மீட் பன்னேன்… ரெண்டு பேரும் டீ கடைக்கு போனோம்… 

அப்ப டிவியில பிரதமர் மோடி, கொரோனா காலத்த போல நாம் தயாராக இருக்கணும்னு பேசிட்டு இருந்தாரு

ADVERTISEMENT

இத கேட்ட என் ப்ரண்ட்,   6 வருஷம் ஆகியும் அந்த ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ ஆசை மட்டும் நம்மள விட்டு போக மாட்டேங்குது… மறுபடியும் அப்படி இருந்தா நல்லாருக்கும்ல சொன்னான்… 

இதை கேட்ட டீ மாஸ்டர் தம்பி… அவர் ‘தயாரா இருங்க’ன்னு சொன்னது விழிப்புணர்வோட இருக்கச் சொல்லி… நீங்க என்னடான்னா மறுபடியும் தலைகாணியோட தூங்கத் தயாரா இருக்கீங்கனு டீய சூடா கொடுத்தாரு

ADVERTISEMENT

குடிச்சிட்டு கிளம்பிட்டோம்… நீங்க அப்டேட்ஸ் பாருங்க

ADVERTISEMENT

balebalu

மாம்பழத்துக்கு உரிமை கோரி சகோதரர்கள் சண்டை இட்டால் அது
புராண காலம் தந்தையும் மகனும் சண்டை போட்டால் அது தேர்தல் காலம்

கடைநிலை ஊழியன்

manager – சொன்ன வேலை என்னாச்சு.. முடிச்சிட்டியா.. ?
employee – அத நேத்தே முடிச்சுட்டேன்..
manager – அப்ப ஏண்டா, நேத்தே என்கிட்ட சொல்லல.. ?
employee – சொன்னா, வேற வேல தருவீங்களே.. அதான் சொல்லல..

கோழியின் கிறுக்கல்!!

குழந்தைகளுக்கு கஷ்டம் தெரியாம வளர்க்கலாம்,
ஆனால் அதுக்கு நாம் படுகிற கஷ்டத்தை தெரியாமல் வளர்க்க கூடாது!!

balebalu

ஏண்ணே அவனை அடிக்குறீங்க
தமிழக ‘ வெற்றி கழகம் ன்னு பெயர் இருக்கு ஆனா
‘புதுச்சேரி’ மாநிலத்துல எப்படி போட்டி போட போறாங்க னு கேக்குறாம்ப்பா

Writer SJB

ட்ரம்ப்:- ஏதோ நீ கெஞ்சி கேட்டுக்கிட்டதால போரை நிறுத்தலாம்னு முடிவு பண்ணிட்டேன்,,
ஈரான்:- நான் கெஞ்சவே இல்லையே.

тαмιℓ

In Every ATM mechine
உன்கிட்ட 500rs தான கேட்ட 5000rs இல்லல்ல
அப்புறம் ஏன்டா.. ஒத்த தாளுக்கு, மொத்த தாளையும் எண்ணிக்கிட்டு கிடக்க

🅰NU 🅱rizzLina

2 மாசத்துக்கு முன்னாடி யாரு என்ன வெறுத்தாங்களோ,
அடுத்த 3 மாசத்துக்கு என்ன மட்டும்தான் தேடுவாங்க -ஜீஸ் கடைக்காரர்…..

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share