தேர்தல் எஃபெக்ட்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு ஆபீஸ் முடிச்சு வீட்டுக்கு போனேன்… எங்க பக்கத்து வீட்டு அக்கா அவங்க ஹஸ்பண்ட் கிட்ட சண்ட போட்டு இருந்தாங்க…

என்னாச்சு அக்கானு கேட்டேன்… நாளைக்கு எனக்கு பிறந்தநாளு… காலைல வெளிய போகும் போது ரெடியா இரு, சாயங்கலாம கடைக்கு போய் புடவை எடுக்கலாம்னு சொன்னாரு. சரினு நானும் ரெடியா இருந்தேன்.

ADVERTISEMENT

சாயந்தரம் வந்ததும் கேட்டா… அடியே நானே இப்பதான் தலைவருக்கு பிரச்சாரம் செய்துட்டு, அங்கிருந்து நேரா வீட்டுக்கு வரேன்… தேர்தல் முடியும் வர எஃபெக்ட் இப்படிதான் இருக்கும்… நான் என்ன சொன்னாலும் நம்பாதனு தூங்கிட்டாருனு சொன்னாங்க…

இந்த எஃபெக்ட் குறைய இன்னும் ஒன்றரை மாசம் ஆகுமே…

ADVERTISEMENT

சரி… நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ADVERTISEMENT

ச ப் பா ணி

உண்மையான நண்பனை
Surety கையெழுத்து வாங்கும்போது
அறியலாம்

கோழியின் கிறுக்கல்!!

மற்ற நாடுகளில் வண்டியில் போக நாலு திசைகளை பார்த்து போனா போதும்,
ஆனா நம்ம ஊர்ல மட்டும் பதினாறு திசையிலும் பார்த்துட்டு தான் போகணும்!!

Sasikumar J

~ வெற்றிகரமாக 2வது வாரம் மாமா…!
~ அப்படியா எந்த படம்…?
~ படமா, கேஸ் சிலிண்டர் புக் பண்ணி 2 வாரம் மேல ஆச்சு இன்னும் வரமா…!!

அண்ணாச்சி

வீட்டில் ” அடுப்பு “
எரிய காரணம் மோடிஜி்..!!

சரண்யா

எதுக்குயா இப்ப ஜூஸ் விலையை ஏத்துருக்கீங்க..
உங்களுக்கு விஷயம் தெரியாதா கேஸ் விலை ஏறிடிச்சி ல…

Writer SJB

என்னங்க நான் அம்மா வீட்டுக்கு போய் ஒரு வாரம் கழிச்சு தான் வருவேன், ஆமா நீங்க சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க ?
அட விடுமா மனுஷனுக்கு சாப்பாடா முக்கியம் ?
நிம்மதி தான் முக்கியம்..!

caroline

~ சிலிண்டர் இல்லாமல் சமைப்பது எப்டி
Me ~ பக்கத்து வீட்ல குழம்பும்
எதிர்த்த வீட்ல சோறும் வாங்கிட்டா போச்சு

கோவிந்தராஜ்

மே 4:
~ அவருக்கும் டெபாசிட் போச்சா..?
~ அவருக்கு மட்டும் இல்ல, இவருக்கும் டெபாசிட் போச்சு…

லாக் ஆப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share