இதுல எது உண்மை… : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

ச ப் பா ணி

ADVERTISEMENT

எவ்ளோ சம்பாதிக்கிற ??
ஒரு குண்டுமணி தங்கம் வாங்க முடியாத அளவுக்கு சம்பாதிக்கிறேன்..

மயக்குநன்

ADVERTISEMENT

கூட்டணிக் கட்சிகள் திமுகவுக்கு தாலி கட்டிய மனைவி போல் ஆகிவிட்டன!- செல்லூர் ராஜு.
அதிமுகதான் பாஜகவுக்கு அடங்கிய மனைவியா ஆயிடுச்சே..?!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ADVERTISEMENT

புதிய கட்சி தொடங்கிய சசிகலா.!
பிரிஞ்சு கிடக்கற அதிமுக பக்கிகளை ஒன்னு சேர்க்க போறேன்னு சொன்னதும் புதுசா ஒரு கோஷ்டி உருவாக்கினதும் ஒரே சின்னம்மாவா..?

Sasikumar J

சிக்ஸ் பேக் இருக்கும்போது கேமரா மொபைல் இல்ல, கேமரா மொபைல் வந்த பிறகு சிக்ஸ் பேக் இல்ல…!!

ச ப் பா ணி

என்ன.. யார் அரசியல் கூட்டம் போட்டாலும் மக்கள் கூட்டம் அள்ளுது
தலைவர்கள் மைண்ட் வாய்ஸ்:
அதான எனக்கும் தெரியல

மயக்குநன்

ஒரு லட்சம் தந்தாலும் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்!- டிடிவி தினகரன்.
20 ரூவா டோக்கன் தந்தாதான் வாக்களிப்பாங்கன்னு சொல்றாரோ..?!

Sasikumar J

~ முதல் சதம் அடித்தது…!
~ T20 வேர்ல்ட் கப் மேட்ச் லலையா..,?
~ அட ஈரோடு வெயில் ல சொன்னேன்…!

சங்கரிபாலா

திருடன் திருட ஆசைப்படாத பொருள் ஒன்று உண்டெனில் அது புத்தகமே…!!!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share