இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ச ப் பா ணி
பஸ்ஸை விட பஸ்ஸில் ஏறும் பயணிகள் தான் தாமதமாய் வருகின்றனர்
-ஆம்னி பஸ் அலப்பறைகள்Sasikumar J
வின்டர்ல வாட்டர் ஹீட்டர் யோட EB சார்ஜை, சம்மர்ல AC யோட EB பில் நேர் செய்கிறது…!

மயக்குநன்
திமுகவினரைப் பார்த்தால் விசில் எடுத்து ஊதுங்கள்!- நாஞ்சில் சம்பத்.
புது இன்னோவா கார் ஹாரன் சத்தம் நல்லாவே கேக்குது தலைவரே..!

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚
உலகத்துலேயே ஈஸியான வேலை எதுன்னா,
மத்தவங்க வேலையை குறை சொல்வது தான்.

ச ப் பா ணி
ஜாதியை ஒழிப்போம்னு சொன்னால் அரசியல்வாதி ஆகப்போறாங்கனு அர்த்தம்
ஊழலை ஒழிப்போம்னு சொன்னால் அரசியல்வாதி
ஆகிட்டாங்கனு அர்த்தம்

படிக்காதவன்™
பிரபலமும் பிராப்ளமும்
அளவோடு இருந்துகிட்டா போதும்…
P R Sundar
என்னையும், மக்களையும்
யாராலும் பிரிக்கமுடியாது.
நாங்களாக கிரீஸ் தடவி
பிரித்தால்தான் முடியும்.

ArulrajArun
~ சூடு பிடிக்க ஆரம்பிச்சுருச்சு மாமா
~ தேர்தல் களமா மாப்ள
~ தேர்தல் களமா , கோடை வெயில் மாமா

iQKUBAL
கடவுள் மனிதனை படைத்தான்..
மனிதன் தனக்கு தேவையான
கடவுளை உருவாக்கினான்..

மயக்குநன்
ஆட்சியில் பங்கு கேட்கிற பிரச்சினை அதிமுக கூட்டணியில் இல்லை!- இபிஎஸ்.
அதிமுகவையே பங்கு கேட்கிற பிரச்சினை வராம இருந்தா சரி..!

கோழியின் கிறுக்கல்!!
டீக்கடைக்கு போனா,
நம்ம கேட்காமலேயே ‘அரை சக்கரை’ போடுற வயசாகிடுச்சு போல நமக்கு!!
லாக் ஆஃப்
