ADVERTISEMENT

விஜய் பாட்டா… அம்மா பாட்டா :  அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு சனிக்கிழமை லீவு.. சரினு என் நண்பர் வீட்டுக்கு கிளம்பினேன். அவர் அரசியல்வாதிங்கிறதால தேர்தல் சமயத்துல பிஸியா இருப்பாரே… வீட்ல இருப்பாரா இல்லையானு யோசிச்சிகிட்டே போனேன். 

நல்லவேல வீட்டில தான் இருந்தாரு… ஆனால் உக்கிரமா இருந்தாரு… என்ன நண்பா கோவமா இருக்கீங்கனு கேட்டேன்

ADVERTISEMENT

அதுக்கு அவர்,  ‘அதிமுக தனபால் மகன் விஜய் கட்சில சேந்துட்டாரு… அதனால் அவங்க வீட்டுல இனி அம்மா, எம்,ஜி.ஆர் பாட்டு கேப்பாங்களா… இல்ல விஜய் பாட்டு கேப்பாங்களானு என் பையன் கேக்குறானு… அதான் நாலு போடு போட்டு வந்து உட்கார்ந்துருக்கேனு” சொன்னாரு… 

அது இருக்கட்டும்… அவங்க வீட்டுல அதிமுகவுக்கு ஓட்டு போடுவாங்களா… இல்ல விஜய்க்கு ஓட்டு போடுவாங்களா…. 

ADVERTISEMENT

சரி நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

ADVERTISEMENT

தேர்வுகளே வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன

திருப்பூர் சாரதி

இன்றுமுதல் அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு 500% வரி விதிக்கிறேன்!
– மாவீரன் டிரம்ப்

பரமசிவம் ராமசாமி

பல லட்சக்கணக்கான
மனங்களை உடைத்த
ஒரு கேள்வி……!!!

நான் கேட்டேனா ,?!
உன்கிட்ட இதெல்லாம்
எனக்காக செய்யின்னு….?

ҭαʍίl

நமக்கு கிடைக்கனும்னு இருந்தா கண்டிப்பா நமக்கு கிடைச்சே தீரும்..
அப்படி என்ன கிடைச்சது…
கஷ்டம் தான்…

கடைநிலை ஊழியன்

சாயங்காலம் மேனேஜர் கண்ணுல படமா வீட்டுக்கு கிளம்புறதுக்குள்ள..
போதும்.. போதும் னு ஆகிருது டா சாமி..

ArulrajArun

நமது water bottle யை அடுத்தவர் தண்ணீர் குடிக்க கேட்கும் போது நாம் தராமல் இருப்பதும் ஒரு வகை நவீன தீண்டாமை தான்

Sasikumar J

காசு, பணம் இல்ல, கஷ்டமா இருக்கு ரொம்ப கடன் சிரமமா இருக்கு அப்படின்னு எல்லாம் சொல்லிட்டு வேண்டிகிட்டே என்ன பார்க்க இலவச தரிசனம் இருக்கு, அதுல வராம 500₹ கொடுத்து ஸ்பெஷல் தரிசனத்தில வரியே யாருடா நீ…!

ச ப் பா ணி

அங்க பாத்துப் போங்க, கல்லு கொட்டியிருக்காங்க.
எம்.ஆர்.ராதா:ரோடு போடுறாங்களோ இல்லையோ 6 மாசத்துக்கு முன்னாடியே கல்ல கொட்டியிடுறாங்க
-ரத்தக்கண்ணீர்

டிங் டாங்

பொங்கிவரும் பாலுக்கு
எவ்வளவு தாகமோ .?
நீர் குடித்தவுடன்
அடங்கியது…!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share