இன்று இணையத்தில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

ArulrajArun
“கூட்டணி குறித்து பொதுவெளியில் யாரும் பேசக்கூடாது” -கிரிஷ் சோடங்கர்
-தமிழக காங்கிரஸ்காரர்கள்; ஒரு காலத்துல எப்படி இருந்த கட்சி Afterall ஒரு ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு வேணும்னு பொதுவெளியில பேச முடியல

ச ப் பா ணி
வாகனத்தில் போகும் போது இண்டிகேட்டர் போட மறந்தவர்களை விட..
இண்டிகேட்டர் போட்டதை மறந்தவர்களே அதிகம்

iQKUBAL
அது எப்புடிடா, எந்த வேலையும் பாக்காதவனுக்கு மட்டும் சம்பளம் கூடுது.. 😳
-அரசியல்

ArulrajArun
தேர்தலுக்கு முன்பாக கிராமங்களில் போடும் “தார் சாலைகள்” தான் ஆட்சியில் இருக்கும் அந்த கட்சியின் வெற்றிக்கு “வழி”

mohanram.ko
நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்ணை மூடிக்கிட்டு சும்மா இருந்து பாரு, சுறுசுறுப்பா இருக்கும்…..
நான் எல்லா நேரமுமே சும்மா தான்டா இருக்கேன்…

amudu
2ஜி வேகத்தை உள்வைத்து, 5ஜி வேகமென புறமொன்று காட்டும் பல நெட் ஒர்க்குகள் இங்கு உண்டு.

ச ப் பா ணி
முறுகலான தோசை..
எருமை வறட்டி போல் மாறி தட்டில் விழ ஆரம்பித்தால்..
தின்னது போதும் எந்திரின்னு அர்த்தம்.

mohanram.ko
பத்து ரூபாய், இருபது ரூபாய் கொடுத்தா சந்தோஷமா வாங்குறதும், 100 ரூபாய் 500 ரூபாய் கொடுத்தா திட்டுறதும் கண்டக்டர் மட்டுமே….
டிங் டாங்
சைவம் மட்டுமே சாப்பிடுவேன் என்று சொல்பவரின் வீட்டு காலிங் பெல்லில் கோழிச்சத்தம்

லாக் ஆஃப்
