ADVERTISEMENT

அந்த 15 லட்சம் ரூபாய் வருமா? அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு வழக்கம் போல நானும் நண்பரும் டீ கடைக்கு போனோம்…  அப்ப நம்ம நண்பரு,  ‘5000 ஆயிரம் கொடுத்து ஸ்டாலின் சார் திடீரென இப்படி பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துருக்காரு’னு சொன்னாரு.

ஆமாம்… ஆனா அந்த 5 ஆயிரத்துல இருந்து ஒரு 2 ஆயிரத்த என் மனைவிக்கிட்ட வாங்கனும் அதுக்கு தான் ப்ளான் போட்டுட்டு இருக்கனு சொன்னேன்… 

ADVERTISEMENT

இதை கேட்ட நம்ம நண்பரு, அட விடுங்க நண்பா,  கடல்ல ஒரு பொருள போட்டா எப்படி எடுக்க முடியாதோ… அதே மாதிரி பெண்கள்ட்ட இருந்து இந்த காச வாங்க முடியாது. நம்ம மோடி சார் சொன்ன 15 லட்சம் வர வரைக்கு காத்திருப்போம்னு சொல்றாரு… 

இவருக்கு என்னவொரு நக்கல்… 

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… 

படிக்காதவன்

ADVERTISEMENT

இன்னைக்கு என்ன நாள்
பிப்ரவரி 14
அதான் என்ன நாள்
சனி பிரதோஷம்
சனிக்கிழமை
வேற எதுவும் இல்லையா
இல்ல
90’s கிட்ஸா
ஆமாங்க
சரி…

ArulrajArun

“உலகின் தொன்மையான மொழியான தமிழில் உரையாற்ற முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்..”
-தமிழர்கள்; மன்னிப்பு, தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

என் மேனேஜர் ஒரு Master Card மாதிரி மாமா..
நிஜமாவா மாப்ள..? தேவைப்படும் போதெல்லாம் காசு கடனா தருவாரா..?
கடனா..? நான் செய்யற எல்லா வேலைக்கும் அவர் கிரடிட் எடுத்துக்குவார்னு சொல்ல வந்தேன் மாமா..

P R A G A

1)விடு பார்த்துக்கலாம்..
2)எல்லாம் சரியாகிடும்..
3)ஒன்னுமில்ல..

இந்த மூணு வார்த்தையை வச்சு தான்
வாழ்க்கையை ஓட்டிட்டு இருக்கேன் டா சரவணா….

-Life motivation

அண்ணாச்சி

சொல்லாமல் கொடுப்பது 5000
தருவேன் என்று தராதது 1500000

படிக்காதவன்

கவிதை எழுதவோ
படிக்கவோ ரசிக்கவோ பிடிக்கும்
அதே நம்ம வீட்டு பிள்ளைங்களுக்கு வந்தா மட்டும்
காதல் கசக்கும்…

Marees

ஏன் அமைச்சரே இந்த arrange marriage செய்த லகுடபாண்டிகள் எதற்கு ஜோடி போட்டோவுடன் குறுக்க மறுக்க ஓடுகிறார்கள்.
திருமணத்திற்குப் பின்பும் காதலில் மூழ்கித் திளைக்கிறார்களாம் மன்னா

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share