இன்னைக்கு நானும் நண்பரும் ஆபீஸ் முடிஞ்சு ஒரே கேப்-ல வீட்டுக்கு போய்ட்டு இருந்தோம்.
அப்ப, மும்பைல இசைச்சாலை ரெடி பன்னிருக்காங்க.. ஏ.ஆர்.ரகுமானின் ஜெய் ஹோ பாடல் ஒலிக்கிற மாதிரி வடிவமைச்சிருக்காங்க…
இது மாதிரி சென்னையிலும் இசைச்சாலை வடிவமைக்கனும்னா… என்ன பாட்டு நீங்க ரெஃபர் பன்னுவீங்கனு கேட்டேன்…
என்ன கோபத்துல இருந்தாரோ முதல்ல குண்டும் குழியும் இல்லாம ரோட்ட போட சொல்லுங்கப்பா… வீட்டுக்கு கூட சரியான நேரத்துக்கு வர முடியல… இதுல இசைச்சாலையாம்… இசைச்சாலைனு சொல்லிட்டு இறங்கி போய்ட்டாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ArulrajArun
“மோடிக்காக எங்கள வேணாம்னு சொல்லிடாதீங்க” – திண்டுக்கல் சீனிவாசன்
-எங்க தலைக்கு தில்ல பாத்தியா

Writer SJB
210 தொகுதி ஜெயித்து தனி மெஜாரிட்டியில் ஆட்சி அமைப்போம் பேசி இருக்கீங்க,,?
அப்படி சொன்னாதான் டெபாசிட்டாவது கிடைக்கும் ஜி..!

balebalu
நிமிடங்களில் ஒருவர் மீது
பன்னீரையும் அள்ளி தெளிக்க முடிகிறது
சேற்றையும் வாரி வீச முடிகிறது
-சோமீ பரிதாபங்கள்

அண்ணாச்சி
பங்கு…பிரி…பங்கு பிரி…!!
-காங்கிரஸ்

Sasikumar J
வண்டிய சர்வீஸ் விட்டு இருக்கேன், ஆபீஸ்க்கு உன் கூடயே சீக்கிரமா வாரேன், சீக்கிரமா போகலாம் அப்படின்னு சொல்லுவான்…!
நம்பாதே…!

செங்காந்தள்
“கோட்டை முதல் குமரி வரை நாம்தான் பேச்சு” – பிரேமலதா விஜயகாந்த்
கோட்டை, குமரி என இரண்டு இடங்களிலும் டீலிங்னு சொல்லுங்க

balebalu
கூட்டணி ஆட்சியில் தமிழக மக்களுக்கு பிரச்சனையில்லை – காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தி
அப்ப கர்நாடகா , தெலுங்கானா மக்களுக்கும் பிரச்சனை இல்லைதானே
முதலில் அங்கு அமல்படுத்தி பார்க்கலாமே

லாக் ஆஃப்
