இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

mohanram.ko
என்னடா இது…. வேற கட்சியோட விருப்ப மனுவை வித்துக்கிட்டு இருக்கீங்க….
ஆமாம் ணே … நம்ம கட்சியோட விருப்ப மனுவை யாரும் வாங்க மாட்டேங்கிறாங்க….அதனாலதான்

ச ப் பா ணி
வாயிருந்தும் ஊமையாய் இருப்பது
“only admins can message வாட்ஸப் group”ல்மட்டும் தான்

balebalu
கோர்ட் கேசு ன்னு ஒரே தொல்லையா இருக்கு
நெஞ்சு வலி ன்னு சொல்லிட்டு ஹாஸ்பிடலுக்கு போய் படுத்துக்க வேண்டியது தான்
அண்ணே
அங்க நீட் நெகடிவ் மார்க்ஸ் வாங்குன டாக்டர்ஸ் இருக்காங்க பரவாயில்லையா
ஐயோ வண்டிய திருப்பு
நான் கோர்ட்டுக்கே போயிடுறேன்
-NEETPG

தர்மஅடி தர்மலிங்கம்
பணத்தால் சந்தோஷத்தை விலைக்கு வாங்க முடியாது – எலான் மஸ்க்!
அப்படின்னா அந்த பணத்தை என்கிட்டையாச்சு கொடுப்பா நாங்களாச்சும் சந்தோஷமா இருந்துக்கிறோம்..

75% டீ – டோட்டலர் கீரி
யாருமில்லை என்பதற்காக
வாழாமல் இருக்க முடியுமா ?
ஆள் இல்லாத கடலிலும் அலையடிக்கத் தான் செய்கிறது.

மயக்குநன்
எம்ஜிஆர் – ஜெ. ஆட்சியைக் கொண்டு வருவதற்கு, எனது 39 ஆண்டு அனுபவத்தை வைத்து என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வேன்!- சசிகலா.
பஸ் வர்றதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் டைம் இருக்கு… என்னெல்லாம் செய்வீங்க… சொல்லுங்க… கேட்போம்..!

படிக்காதவன்
தொலைச்சத தொலைச்ச இடத்தில்தான் தேட முடியும்
தேடியும் கிடைக்கலை’னா
ஒருவாரம் கழிச்சு தூய்மை பணியாளர்கள்கிட்ட விசாரிச்சு பாத்தா கிடைக்கும்…

கோழியின் கிறுக்கல்!!
‘Adjust பண்ணிக்கோ’ என்பது நடுத்தர வர்க்க மக்களுக்கு மட்டுமே ஆன வாக்கியம்!!

லாக் ஆஃப்
