இன்னைக்கு நைட் நானும் நண்பனும் கடைக்கு சாப்பிட போனோம். சர்வர் வந்து என்ன சாப்டுரிங்கனு கேட்டாரு…
வெஜ்ல என்னென்ன இருக்குனு கேட்டேன்… அப்ப நம்ம நண்பரு, என்ன இன்னைக்கு வெஜ் சாப்டுரிங்க வழக்கமா, நான் வெஜ்தானே ஆர்டர் பன்னுவிங்கனு கேட்டார்.
அதுவொன்னுமில்லை பறவை காய்ச்சல் பரவுதுல அதனால, ஹாஃப் பாயில் சாப்பிடக் கூடாதுனு அமைச்சர் சொல்லிருக்காருல அதனாலதானு சொன்னாரு…
இதை கேட்டு பதறி போன நண்பரு… அய்யய்யோ நேத்துதானே 2, 3 ஹாஃப் பாயில் சாப்பிட்டேனு பதறுனாரு….
அய்யோ, அப்படி சொல்லல நண்பா, சிக்கன அரைவேக்காடா இல்லாம முழுமையா வேகவச்சு சாப்பிடனும்னு சொன்னாருனு சொன்னேன்…
இதை கேட்ட அவர், எதையா இருந்தாலும் தெளிவா சொல்லுங்கப்பா… எனக்கு சாப்பாடும் வேணாம் ஒன்னும் வேணாம்னு கிளம்பிட்டாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
“கோட்டை முதல் குமரை வரை நாம்தான் பேச்சு” – பிரேமலதா விஜயகாந்த்
தே.மு.தி.க. விருப்ப மனு – வெறிச்சோடிய கோயம்பேடு அலுவலகம்
-இரண்டும் வேறு வேறு செய்திகள்

மயக்குநன்
ஊழலின் குறியீடு திமுக!- தமிழக பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய அதிமுக எதன் குறியீடு ஜீ..?!

balebalu
உப்பில்லா பண்டம் குப்பையிலே – பழமொழி
-தங்கம் மிதமிஞ்சி போனா குப்பையிலே – புதுமொழி

ArulrajArun
சொந்தக்காரங்க கிட்ட வேலை கேட்டு resume கொடுக்கிறதும், பொண்ணு பாக்க ஜாதகம் கொடுக்கிறதும் ~ “இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்”, … Moment தான்

ச ப் பா ணி
நமக்கு சூடு, சொரணை, தன்மானம் உள்ளதைத் தான் பலர் அதனை ஈகோ என முத்திரை குத்துகின்றனர்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அடுத்த வாரம் லவ்வர்ஸ் டே வருதே, நீ எங்கடா இருப்ப..?
நான் ஒன்னு வீட்ல இருப்பேன், இல்லேன்னா ஆபிஸ்ல இருப்பேன்..!

மயக்குநன்
தவெக தலைவர் விஜய்யைப் பார்த்து, எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது!- செங்கோட்டையன்.
அவர் அளவுக்கு மேடையில் டான்ஸ் ஆட முடியுமாங்கிற பயம்தானே அது..?!

Sasikumar J
தூண்டிலை வீசி எவ்வளவு நேரம் மீனுக்காக காத்திருப்பது என்பது முக்கியமல்ல; மீன் மாட்டியதும் தூண்டிலை தூக்கும் போது வேகம் மிக முக்கியமானது…!!

Writer SJB
இங்க பாருடி நகை கடை வேலைக்கு குப்பை அள்ளும் டிரஸ் போட்டுட்டு போறாரு,,,
இப்ப எல்லாம் நகை கடையை விட குப்பை தொட்டியில் தான் நிறைய நகை கிடைக்குது குந்தாணிகளா..!

லாக் ஆஃப்
