இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

iQKUBAL
அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா…….
மனுஷனா மட்டும் பிறக்க கூடாதா?
அதான் இல்ல.. பிறக்கவே கூடாது..

ச ப் பா ணி
High way ல் இருக்கும் பேக்கரிகள்
டீ க்குடிக்க நிறுத்தியதை விட,
அவசர தேவைக்கு நிறுத்தியதே அதிகம்

ArulrajArun
Medical leave க்கும் Medical க்கும் சம்பந்தமே இருக்காத மாதிரிதான் இப்போ இருக்குற lovers day க்கும் Love க்கும்

Pandidurai
திமுக கூட்டணியில் 15 சீட்கள் கேட்கும் கமலஹாசன்-செய்தி…
கட்சில இருக்குற எல்லோரும் எம்.எல்.ஏ ஆகணும்னு நினைக்கிற அந்த மனசு தான் சார் கடவுள்…!!!

மயக்குநன்
அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது!- செங்கோட்டையன்.
அந்த பயத்தில்தான் நீங்க தவெகவுக்கு தாவிட்டீங்களோ தலைவரே..?!

Suresh K
சொன்னது நீட் ரத்து
செய்தது Group 2 ரத்து.

Writer SJB
நானே சுகருக்கு இன்சுலின் போட்டுட்டு இருக்கேன் தம்பி, எல்லாரும் டைரி மில்க் சில்க் சாக்லேட் கொடுத்து ப்ரபோஸ் பண்றாங்க தம்பி..!

செங்காந்தள்
ஜடை கட்ட கண்டுபிடித்த ரிப்பன் இப்போது கட்டிடத் திறப்பு விழாவில் வெட்ட மட்டுமே பயன்படுகிறது…!!!

vijaychakkaravarthy
“யார்டா அந்த பொண்ணு…உன்ன எல்லா லவ் ட்வீட்லயும் தைரியமா tag பண்ணுது.. propose day, rose day, இன்னைக்கு chocolate dayனு உன்ன விடாம tag பண்ணிட்டே இருக்கு…கமிடட் ஆகிட்டியா…?”
“அது என்னோட fake idதான்”

டிங் டாங்
இரண்டு மணி நேரம் ரீல்ஸ் பார்த்து முடித்த பிறகு, இந்த நேரத்திற்கு நன்றாக தூங்கியிருக்கலாம் என்ற குற்றவுணர்வு வந்துவிடுகிறது

ச ப் பா ணி
ஆள் இல்லைன்னா பிப்ரவரி மாசம் மட்டும் தான்டா கஷ்டப்படவ…
அதுவே., ஆள் இருந்தா எல்லா மாசமும் கஷ்டப்படுவ..!

மயக்குநன்
எங்கள் கூட்டணிக்கு விஜய் வந்தால் அவருக்கு நல்லது!- நயினார் நாகேந்திரன்.
இல்லைன்னா… அவர் கூட கூட்டணி வைக்க ஈ.டி, ஐ.டி. எல்லாம் வரும்னு சொல்றாரோ..?!”

கோழியின் கிறுக்கல்!
‘அது வேணாம் பா ரொம்ப costlyஆ இருக்கு’ என்று மகள் சொல்லும் பொழுது,
மகிழ்ச்சியுடன் பெருமையும் கூடவே ஒட்டிக் கொள்கிறது!!

லாக் ஆஃப்
