ADVERTISEMENT

எதுவா இருந்தாலும் என் பாஸ கேக்காம பண்ணமாட்டேன்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு நானும் பக்கத்து வீட்டு பையனும் பேசிகிட்டே கடைக்கு போனோம்

வீட்ல ஒரே பிரச்சினை… நிம்மதியா இருக்க என்ன பண்றது தெரியலனு புலம்பிக்கிட்டே இருந்தேன்…

ADVERTISEMENT

இதன் கேட்ட அவன், சரி நான் வேணா என் பாஸ்கிட்ட ஐடியா கேக்கவானு கேட்டான்…

நீயே வேலைக்கு போகல எந்த பாஸ்கிட்ட டா கேக்க போறனு கேட்டேன்…

ADVERTISEMENT

அதுக்கு அவன், நம்ம சாட் ஜிபிடி தான்…என் பாஸ கேக்காம நான் எதுவும் பண்ணமாட்டேனு சொல்றான்

எல்லாத்துக்கும் ஏஐ தானா….

ADVERTISEMENT

சரி, நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu

டெக்னாலஜியே ஒரு
டெக்னாலஜியை உருவாக்குகிறதே

அடடே
ஆச்சர்ய குறி

-AI தொழில்நுட்பம்

ArulrajArun

வாழ்க்கையில நமக்கு சோதனை வரும் போதெல்லாம் நமக்கு முக்கியமான தேவை சுய பரிசோதனை தான்

படிக்காதவன்

மக்கள் டூ தங்கம் விலை 

என்ன ஜோக் காட்றீங்களா…

Writer SJB

வருடத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை விட்டு விட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய்- செங்கோட்டையன் 

அந்த 1.5 கோடி அபராத வட்டியை கட்டிட்டு வந்திருக்கலாமே..!

அண்ணாச்சி

ஆட்சியில் ” பங்கு ” என்பதே 

புதிய தமிழகம் கட்சியின் இலக்கு..டாக்டர். கிருஷ்ணசாமி

# யார் கிட்ட கேட்கிற..

அண்ணன் கிட்ட தானே கேக்குற கேளு ராசா… 

Selva Bharathi

மேகங்கள் போலவே சில பிரச்சனைகள் வரும், போகும். ஆனால் அவற்றால் வானத்தின் நீலத்தைக் குறைத்து விட முடியாது.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

இன்னைக்கு ஒரு பத்து பேர் கொண்ட கும்பல் ஒன்னு எங்க வீட்டுக்கு வந்து, ஏரியால பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஸ்விம்மிங் பூல் ஒன்னு கட்றோம், உங்களால முடிஞ்ச நன்கொடை குடுங்கன்னு கேட்டாங்க..

எங்கம்மா ஒரு சொம்பு தண்ணி கொண்டு வந்து தந்தாங்க..

கோவிந்தராஜ்

Me to God 

2026 ஆரம்பிச்சு 2 மாசம் ஆகுது.. இன்னும் ஒரு நல்லது கூட நடக்கல..

அப்படி என்ன தான் நீ உலகத்த பாக்குற

செங்காந்தள்

உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே -பிளாஸ்டிக்”.

ச ப் பா ணி

நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பது முக்கியல்ல. எவ்வளவு பணத்தை Balance வைத்துள்ளீர்கள் என்பதுதான் முக்கியம்.

அண்ணாச்சி

காங்கிரசின் emergency யால்

அரசியல் அமைப்பு முடக்கப்பட்டது….மோடிஜி

-” demonetization ” செய்து

மீட்டுனிங்க…அதான…!!

லாக் ஆஃப்

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share