இன்னைக்கு ஈவினிங் வீட்டுக்கு போனதும், ரிலாக்ஸ் ஆகிட்டு பேமிலியா உட்கார்ந்து நியூஸ் பாத்துட்டு இருந்தோம்…
ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்குனு செய்தி போய்ட்டு இருந்தது..
உடனே என் தம்பி எங்க அப்பாவ பாத்தான்?
என்ன நினைச்சாரோ… என்னால முடியாதுடா… இனி ரெண்டு கிட்னியும் விக்க வச்சிறாதடானு சொல்லிட்டு டிவிய ஆப் பன்னிட்டு கிளம்பிட்டாரு
நீங்க அப்டேட்ஸ் பாருங்க

ச ப் பா ணி
Every morning:
தாங்கள் எனக்கு போன் பண்ணியதின் நோக்கம்..
Unknown person:
தங்களுக்கு லோன் வேண்டுமா என கேட்கத் தான்..

balebalu
மத்திய ஆளும் கட்சி நவ் :
நாங்களே எலெக்ஷன் நேரத்துல மட்டும் தான்
வணக்கம் , நாலு திருக்குறள் ன்னு தமிழ் பேசி பொழுதை ஒட்டுறோம்
இதுல ஏற்ற இறக்கத்தோட உணர்ச்சி பூர்வமா
தமிழ் பேசி எங்களை தலை சுத்த விடாதீங்க ஐயா
விட்டுருங்க
-KamalHaasan

ச ப் பா ணி
ஆன்லைனில் கிடைக்கும் அன்பும்
ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜீம் அதிகம் நீடிப்பதில்லை
-படித்தது

குருநாதா
வாங்குன கடன தரலனா கூட மன்னிச்சுருவேன் டா…
ஆனா ஒவ்வொரு தடவயும் அக்கவுண்ட் நம்பர் கேக்குற பாரு அத மட்டும்
மன்னிக்கவே மாட்டேன் டா…
mohanram.ko
எங்க கட்சியில சேர்ந்தா எல்லோரையும் ஃபிட்னஸா வச்சுக்குவோம்…
எப்படிடா…
கார் பின்னாடியே ஓடி வர வச்சு தான்…

பாக்டீரியா
Translater device ~
கமல் தமிழ்ல தான் பேசுனாரு… ஆனா அத தமிழ்ல translate பண்ண எனக்கே 20 வருஷம் ஆகும்…

டிங் டாங்
மாத பட்ஜெட் கையை கடிக்கிறது என்று கம்மி விலையில்
செருப்பு வாங்கினேன்,
அது காலை கடிக்கிறது
அண்ணாச்சி
உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை ” உற்று ” நோக்குகின்றன….!!!
-இந்திய பொருளாதாரம்…!!!
லாக் ஆஃப்
