ADVERTISEMENT

வருமானத்துக்கு வழி பண்ணுங்கம்மா : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு வீட்டுக்கு போனதும், அப்பா போன மாசத்துக்கு எவ்வளவு செலவாச்சுன்னு கணக்கு சரி பார்த்து இந்த மாசத்துக்கான பட்ஜெட்டை போட்டு பாத்துட்டு இருந்தாரு…

அப்போ எண்ட்ரி கொடுத்த அம்மா, ஏங்க வருமானம்லாம் கரெக்டா காமிச்சிடுங்க இல்லனா 100 சதவிகிதம் வரி போடுவாங்கலாம். நம்ம நிதியமைச்சரம்மா அறிவிச்சுருக்காங்கனு சொன்னாங்க…

ADVERTISEMENT

இத கேட்டு கடுப்பான எங்க அப்பா, வருமானம் வர்றதுக்கு மொதல்ல வழிய பன்ன சொல்லு, அப்பறம் அபராதம் போடட்டும்னு சொல்லிட்டு வெளிய கிளம்பிட்டாரு…

மை மைண்டு வாய்ஸ் -இந்தியாவுல சுமார் 3 கோடி இளைஞர்கள் வேலை இல்லாம இருக்காங்கலாம்….

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ADVERTISEMENT

ArulrajArun
“பிளஸ், மைனஸ் இரண்டும் உள்ள பட்ஜெட்” – பிரேமலதா விஜயகாந்த்
எப்படி மேடம் பட்ஜெட்டை நல்லா வகுத்து பார்த்து சொல்றீங்களா

Writer SJB
நீங்கள் கூரை வீட்டில் இருந்தாலும் சரி
மாடி வீட்டில் இருந்தாலும் சரி அரசியல்வாதிகளுக்கு உங்கள் வீடு -ஓட்டு வீடு தான்..!

balebalu
தேர்தலுக்காவது பட்ஜெட்டுல தமிழ் நாட்டுக்கு ஏதாவது நல்லது
அறிவிக்கக்கூடாதா
அதான் காஞ்சீபுரம் பட்டு சேலை கட்டி
பட்ஜெட் படிச்சோமே
தமிழ்நாட்டு மேல எவ்வளவு பாசம் னு இன்னுமா புரியல்ல

ArulrajArun
வரலாற்றில் முதல்முறை..
இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஞாயிற்று கிழமையான இன்று (பிப்.1) பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது
– தமிழர்கள்; ஏன் முருகா ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் நாங்க நிம்மதியா இருப்போம்…

கடைநிலை ஊழியன்
வாழ்க்கைல சந்தோசம் ‘ங்கிறது, திடீர் னு நல்லா அமையுற “ஞாயிற்றுக்கிழமை பிரியாணி” மாதிரி தான்.. வரும் போது, என்ஜாய் பண்ண பழகிக்கனும் !!

அண்ணாச்சி
வெற்றிவேல் முருகனுக்கு
” அரோகரா “….மோடிஜி
-பழனிக்கே பால் காவடி
எடுத்தாலும் …!!

Writer SJB
இருந்த பணத்தை எல்லாம் போட்டு வீடு கட்டி முடித்த பின், குபேர மூலையில் வீடு உயரமாக இருக்க வேண்டுமென்றார் ஜோசியர்,
கடன் வாங்கி அங்கு ஒரு அறை கட்டி குபேரன் ஆகும் ஆசையில் கடன்காரன் ஆனார் ஹவுஸ் ஓனர்..!

ச ப் பா ணி
ஏன் கறி சோறு சாப்பிடைனு கேட்டா..தைப்பூசம்னு சொல்லனும்.
காசு இல்லைனு சொல்லக்கூடாது

கடைநிலை ஊழியன்
உருப்படியா time ‘ம்மா யூஸ் பண்ணாததும்..
எனக்கு நேரமே சரியில்ல னு சொல்றதும் ஒரே ஆளா..

mohanram.ko
ஒரு மாச சம்பளத்துல ஒரு கிராம் நகை வாங்கலாம்னு போனேன் தம்பி ….செய்கூலி சேதாரத்துக்கு ஓவர் டைம் பண்ண காசையும் கேட்கறாங்க தம்பி…

லாக் ஆஃப்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share