இன்னைக்கு ஆபிஸ் ல ஒரே டென்சன். சரினு வீட்டுக்கு வந்து ரிலாக்ஸ் ஆகலாம்னு கொஞ்ச நேரம் இன்ஸ்டால ரீல்ஸ் பாத்துட்டு இருந்தேன்…
அதுல ஸ்க்ரால் பன்ன பன்ன பென்குயின் வீடியோ வைரலாச்சு…
‘அந்த பென்குயினுக்கு லவ் பெயிலியர், ‘அந்த பென்குயின் மரணத்தை நோக்கி போகுது’ , ‘ அந்த பெண்குயின் தான் விஜய், ‘ அந்த பென்குயின் போல தனிச்சு வா கத்துகணும்’ அப்பப்ப்பா எத்தனை கதைகள்…
உண்மையில் அந்த பென்குயின் எங்கே போச்சுனு தெரியல… ஆனால் இந்த வீடியோ 2007 ஆண்டு வெளியிட்ட ‘Encounters at the End of the World’ என்ற ஆவணப்படத்தின் சிறிய காட்சினு மட்டும் தெரியவந்துச்சு….
அப்பாடா இந்த பென்குயின் கதையே வேணாம்..ரிலாக்ஸா எங்காயவது நடந்து போய்ட்டு வரலாம்னு கிளம்பினேன்…
அப்ப பக்கத்துல தெருவுல இருந்த நம்ம நண்பர் என்னைய பாத்துட்டு, என்ன நண்பா பென்குயின் மாதிரி தனியா போறீங்க… இருங்க நானும் வரேன்னு கம்பெனி கொடுத்தாரு…
சரினு ரெண்டு பேரும் டீக்கடைக்கு போய் ஒரு டீய குடிச்சிட்டு ரிலாக்ஸ் ஆகிட்டோம்…
சரி நீங்களும் பென்குயின் வீடியோ பாருங்க… சாரி நம்ம அப்டேட்ஸ் பாத்து ரிலாக்ஸ் ஆகுங்க…
மயக்குநன்
2026 தேர்தலுக்கான ‘விசில்’ ஊதப்பட்டு விட்டது!- காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி.
கூட்டணிக்கு சங்கு ஊதுறதுலேயே இவர் குறியா இருக்காரே..!

ArulrajArun
Single-ஆக இருப்பவர்களுக்கு
இதய நோய்கள் வர வாய்ப்பு அதிகம் என ஆய்வில் தகவல்!
Single ; பத்துல, பதினொன்னா எடுத்துக்கிட்டு போயிட வேண்டி தான் Next ….

mohanram.ko
மேனேஜர்- நீங்க நல்லா ஒர்க் பண்றீங்க….
ஏதோ ஒரு பெரிய வேலையை நம்ம தலையில கட்ட போறாரு டா…

Mannar & company
விவசாயம் மட்டும் ‘agreeculture’ இல்ல,
கல்யாணம் கூட “Agree”Culture தான்!

balebalu
வடகிழக்கு பருவமழை முடிஞ்சு போச்சு
தென்மேற்கு பருவமழை இன்னும் ஆரம்பிக்கல்ல
அப்ப
இப்போ பெய்யுற மழை எந்த பருவமழை
ஒரே குழப்பமா இருக்கே
chennairains

Mannar & company
எலிப் பொறியில் எலிகளுக்கு வைக்கும் வடைக்கும்,
நடைப்பயிற்சியின்போது கடை விரிந்திருக்கும் வடைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை!

பாக்டீரியா
பெரியவர்கள் காதில் விசில் அடித்தால் அவர் தடுமாறி விடுவார் – செங்ஸ்
~ இந்தாளு காதுகிட்ட போய் ஏதோ ஒரு அணிலு விசில் அடிச்சிருக்கு…

Sasikumar J
குடியரசு தினம் கொண்டாட்டமா என்பது லீவு நாள் வருதா, லீவு கொடுத்துட்டு வருகிறதா அதை பொருத்துதான் இருக்கு…!

எனக்கொரு டவுட்டு!?
மீ to குளிர்காலம்
உன்னாலே ஒண்ணே ஒண்ணு நல்லதுடா, பேன் போடவே இல்லை கரண்ட் செலவு மிச்சம்..!
ச ப் பா ணி
நீங்க ஏன் ரஷ்ய இலக்கிய புத்தகம் அதிகம் வாசிக்கிறீங்க?
அந்த புக்கு தாண்டா அதிகமா ஆஃபரில் கொடுக்கிறாங்க
mohanram.ko
ஒரு மாசம் முடிஞ்சதை, கொண்டாடிகிட்டு இருக்காங்க மாமா…
படம் வெளிவந்தா… மாப்ள?
சென்சாருக்கு அப்ளை பண்ணி மாமா…
மயக்குநன்
திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக் கொண்டு இருக்கிறேன்!- சசிகலா.
தெய்வமே… இந்த வியாதிக்கு மருந்தே இல்லையா..?!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
சட்டப்படி ஒருவரால் 3 அல்லது 4 தொகுதிகளில் போட்டியிட முடியும்
~ புஸ்ஸி ஆனந்த்
– எட்டு கிரகங்களிலும் உச்சம் பெற்ற ஒருவன், எட்டு தொகுதிகளில் கூட போட்டியிட முடியும்..
கோழியின் கிறுக்கல்!!
பசங்க எப்பவும் கார், பைக்கை தங்கும் அறை மாதிரி ரொம்ப சுத்தமா வச்சுப்பாங்க,
ஆனா தங்கும் அறையை தான் ரொம்ப கொடூரமாக வச்சு இருப்பாங்க!!
லாக் ஆஃப்
