இன்னிக்கு காலைல வீட்டில இருந்த பழைய பொருட்களலாம் எடுத்து போட்டு கொளுத்தி போகி பண்டிகைய கொண்டாடினோம்.
கொஞ்ச நேரத்துல என் ப்ரண்டு கால் பண்ணான். இவன்கிட்ட பேசியே வருச கணக்காச்சு…
போன எடுத்து, என்னடா அதிசயமா போன் பண்ணிருக்கனு கேட்டேன்… பொங்கல் வாழ்த்து சொல்லத்தாண்டானு சொல்லிட்டு, ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ பண்டிகைய கொண்டாடிட்டியானு கேட்டான்.
கொண்டாடிட்டேனு சொன்னேன். அப்படினா என்கிட்ட கொடுத்த பழைய கடன மறந்துட்டு புதிய கடன குடுனு கேக்குறான்…
எப்படிலாம் யோசிக்கிறாங்க பாருங்க…
அப்டேட்ஸ் பார்க்க மறந்துடாதீங்க

படிக்காதவன்
சிலருக்கு கோலம் போட தெரியும்’ங்கிறதை
வெளிக்கொண்டு வந்ததே பொங்கல்’தான்…

ச ப் பா ணி
கரும்பு ஒரு கட்டு எவ்வளவுப்பா??
பச்சாஸ் கே கிரோ பாய்,,!!
டேய்,நீயா?

mohanram.ko
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன்….
எதிர்ல ஒயிட் பீம் லைட் போட்டு கார் வந்தா அப்படி தான்டா இருக்கும்…..

ச ப் பா ணி
சொந்த ஊருக்கு போறவனும்
சொந்த ஊரிலேயே இருப்பவனும்
நேர் எதிர் மனநிலையில் இருப்பார்கள் விடுமுறை நாட்களில்

படிக்காதவன்
காதல் கவிதைகள் எழுதி எழுதி
காகிதம் கூட கப்பல் ஏறிவிட்டது
காதலிதான் இன்னும் கிடைத்தபாடில்லை…

டிங் டாங்
ஒருவரை கோபப்படுத்த
“உனக்கென்னப்பா ஜாலியா இருக்க ” என்று கேட்டு விட்டால் போதுமானது

Mannar & company
வாழ்க்கைல சந்தோஷம் வரும்போது ‘நல்லா வாழணும்’னு தோணும், ஆனால்
கஷ்டங்கள் வரும்போது மட்டும்தான் ‘எப்படி வாழணும்’னு தோணும்!

சரண்யா
வீட்டை சுத்தம் பண்ணும் போது தான் தெரியுது,
வீட்ல தேவையான பொருள்களை விட தேவை இல்லாத பொருள்கள் அதிகமா இருக்கு

Sasikumar J
தேவையானதை மட்டும் சேர்த்துக்கொண்டே இருந்தால்; தேவையில்லாதது (பழையது) தானாகவே விலகி (கழிந்து) போகும்…!
அனைவருக்கும் போகி திருநாள் வாழ்த்துகள்..!!

லாக் ஆஃப்
